என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.
    • வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு இன்று அதிகாலை வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி தலைமையில் வனத்துறையினரும் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி தலைமையில் போலீசாரும் ஒதியம்பட்டில் உள்ள நரிக்குறவர்கள் வசிக்கும் 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, நரிக்குறவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நீர் காகம் உள்ளிட்ட 63 வகை பறவை இனங்கள், விற்பனை போக மீதம் வைத்திருந்த 3 கிலோ மான்கறி, உடும்பு, முயல், ஆமை, கிளி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 பெரிய ரக துப்பாக்கிகள், பாஸ்பரஸ் குண்டுகள், விலங்குகள் பிடிக்க பயன்படுத்தப்படும் கன்னிகள், அரிவாள் கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.

    சோதனையின் போது நரிக்குறவர்களுக்கும் வனத்துறை நிற்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் ஆறுமுகத்தின் கை முறிவு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் ஆயுதங்கள் புதுவை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி கூறுகையில், ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசாருடன் சேர்ந்து சோதனை மேற்கொண்டோம்

    அப்போது 7 வீடுகளில் நடத்திய சோதனையில் அரியவகை பறவைகள், விலங்குகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். குறிப்பாக மான்கறி அங்கு இருந்தது.

    மான் கறியை விற்றவருக்கும் அதை வாங்கியவருக்கும் 7 ஆண்டு வரை தண்டனை உண்டு. மேலும் கியூ.ஆர் கோடுகளைக் கொண்டு செல்போனில் வாடிக்கையாளர்களை உருவாக்கி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்து கொண்டு விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இந்த வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் நீதிமன்றம் உத்தரவின் மூலம் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    • கிறிஸ்தவ சபைகளில் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும்.
    • கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    ஆங்கில புத்தாண்டை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் சமீப காலமாக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    2022-ம் ஆண்டு இன்று முடிந்து புதிய ஆண்டு 2023 பிறப்பதை வரவேற்கும் வகையிலும் இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்து பராமரித்து வந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும். குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்த டிஸ்ட், ஆற்காடு லூத்தரன், பெந்தேகொஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளில் இரவு 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்குகிறது.

    பழைய வருட ஆராதனையாக நன்றி ஏறெடுப்பு இதில் முக்கிய அம்சமாக இடம் பெறும். சரியாக இரவு 12 மணி ஆராதனையுடன் புதிய ஆண்டிற்கான ஆராதனை தொடங்கும். புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணக்கு ஆலயங்களில் பட்டாசு வெடித்தும், மின் விளக்கை சில நிமிடங்களில் அனைத்தும் வரவேற்பார்கள்.

    ஹேப்பி நியூ இயர் என கோஷங்கள் கூறி ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அன்பின் வெளிப்பாடாக கட்டி அரவணைத்தும் வாழ்த்துக்களை கூறுவர்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், அண்ணா நகர், பெரம்பூர் லூர்துமேரி, பரங்கி மலை, மாதவரம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க திருச்சபை ஆலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதே போல் செயின்ட் கதிட்ரல் ஆலயம், சூணி பறல், ஆருட்ரா, ராயப் பேட்டை வெஸ்லி, சிந்தாரிப் பேட்டை சியோன், பிராட்வே வண்ணாரப் பேட்டை, தாம்பரம், சேலை யூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் பிற ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடக்கி றது.

    புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. நட்சத்திரங்கள், ஆலயத்தை சுற்றி தொங்க விடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.

    வழக்கத்தை விட எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமியானா பந்தல் மற்றும் சிறப்பு கூடாரங்கள் அமைத்து உள்ளனர்.

    புத்தாண்டு சிறப்பு வழிபாடு முடிந்தவுடன் அனைவருக்கும் தேனீருடன் கேக் வழங்கப்படும். புத்தாண்டையொட்டி முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • நடுத்தர உணவகங்களில் பிரெஞ்சு உணவு வகைகளும் விற்கப்படுகிறது.
    • புத்தாண்டை கொண்டாட புதுவை வந்துள்ள சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களில் குவிந்து உணவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 20-க்கும் மேற்பட்ட நட்சத்திர. ஒட்டல்கள், 25-க்கும் மேற்பட்ட பீச் ரிசார்ட்டுகள் உள்ளன.

    இவை மட்டுமன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய விடுதிகள் உள்ளன. இவை அனைத்திலும் புத்தாண்டிற்கு விதவிதமான நிகழ்வுகளும் உணவுகளும் தயாராகி உள்ளன. நகரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சாலை உணவகங்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்க உள்நாட்டு உணவுகள் மட்டுமல்லாது வெளிநாட்டு உணவு வகைகளையும் மக்களுக்கு வழங்க தயாராகி உள்ளன.

    படேல் சாலை,மிஷன் வீதி, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, சுப்பையா சாலை ஆகியவற்றில் சிறிய ரக உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் சுட சுட கிடைக்கும் உணவுகளை ரசிக்க பெரும் கூட்டமே இருக்கிறது.

    வழக்கமான இட்லி,தோசை மீன் குழம்புடன் நூடுல்ஸ்,பிரைடு ரைஸ் என்பதையெல்லாம் தாண்டி மலேசியா புகழான நாசி கொரியன் இக்காம் ப்ளீஸ், நாசி பத்தாயா, இந்தோனேசியாவை சேர்ந்த மீ கொரியன், மேகி கொரியன், அமெரிக்கன் உணவான கிரிஸ்பி பிராண், கிரிஸ்பி விங்க்ஸ் உட்பட அனைத்து உணவு வகைகளும் இங்கு கிடைக்கிறது.

    இவை மட்டுமல்ல நடுத்தர உணவகங்களில் பிரெஞ்சு உணவு வகைகளும் விற்கப்படுகிறது. இந்த உணவு வகைகளுடன் புதுவையில் புத்தாண்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    புத்தாண்டை கொண்டாட புதுவை வந்துள்ள சுற்றுலா பயணிகள் சாலையோர உணவகங்களில் குவிந்து உணவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    • வெளியூர், வெளிநாடுகளில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு இப்போதே ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர்.
    • இன்று மதியத்திற்கு மேல் இன்னும் அதிக பேர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து புதுவையில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெளியூர், வெளிநாடுகளில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு இப்போதே ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர். இன்று மதியத்திற்கு மேல் இன்னும் அதிக பேர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் என்பதால் அதில் பங்கேற்கும் மக்கள் வெளியே செல்ல நேரம் அதிகமாகும். எனவே புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதைத்தொடர்ந்து நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வழிபாட்டு தலங்களில் மட்டும் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

    • உப்பளம் தொகுதிக்குட் பட்ட அம்பேத்கார் சாலை, சுப்பையா சாலை, காந்தி வீதி, ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
    • சாலையாக அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட் பட்ட அம்பேத்கார் சாலை, சுப்பையா சாலை, காந்தி வீதி, ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனை சரிசெய்ய வேண்டுமென உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வல்லவனை சந்தித்து வலியுறுத்தினார்.

    இதனை இன்று இரவே சீர் செய்து தருகிறோம், பின்னர் புத்தாண்டு பண்டிகை முடிந்த பின் தார் சாலையாக அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தனர்.

    இதில் உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் பன்னீர், மாநில தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மணவெளி தொகுதி தமிழரசி நகரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் தமிழரசி நகரில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்த மின் அழுத்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழரசி நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.
    • மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

    முகாமிற்கு, ஆத்மா திட்ட வட்டார வளர்ச்சி மேலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன், மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.

    புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை வல்லுனர் ரவி, மணிலா உற்பத்தியில் நவீன உழவியல் தொழில் நுட்பங்கள் மற்றும் களை கட்டுப்பாடு என்ற தலைப்பிலும், பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார் மணிலா பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்'' என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர்.

    காரைக்கால் ஜவகாலால் நேரு வேளாண் கல்லூரியி லிருந்து கள பயிற்சி பெற்று வரும் அன்புவானன் தலைமையிலான பாகூர் பகுதி மாணவ குழுவினர் ''மணிலாவில் இனக்கவர்ச்சி பொறி பயன்பாடு மற்றும் ஒரு வரிசை மணிலா விதை விதைக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம் அளித்தனர்.

    இம்முகாமில், பாகூர், இருளன்சந்தை, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், சோரியங்குப்பம், அரங்கனூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசா யிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன் நன்றி கூறினார்.

    • புதுவை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்படதால் பழுது அடைந்து விட்டது.
    • இப்பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்படதால் பழுது அடைந்து விட்டது. இங்கு புதிய மேம்பாலம் கட்ட புதுவை அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜூன் மாதம் பாலம் கட்டுமான பணி தொடங்கியது. இப்பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    6 மாதத்தில் இந்த பாலத்தில் 36 தூண்கள் கட்டப்பட்டு அதன் மேல் பீம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    • புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை மாணவர்களுக்கான அத்தியாயம் இந்தியன் பிளம்பிங் சங்கத்தினால் நிறுவப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியை மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை மாணவர்களுக்கான அத்தியாயம் இந்தியன் பிளம்பிங் சங்கத்தினால் நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியை மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், ேதர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினாராக ஐ.பி.ஏ. ேதசிய செயற் குழு உறுப்பினர் வீரப்பன், நாகா கார்த்திகன், சன்ேமக்ஸ் நிர்வாக இயக்குனர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது.
    • சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.

    புதுச்சேரி :

    புதுச்சேரியில் நடந்த பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    வருகிற புதிய ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாகும். தேர்தல் பணிக்கு நாம் தயாராக வேண்டும். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது. அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்வதுதான் நமது நோக்கம். பா.ம.க. வேகமாக வளர்ந்து வருகிறது.

    நாம் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். பா.ம.க. இல்லாவிட்டால் மக்களுக்கு சமச்சீர் கல்வி கிடைத்து இருக்காது. லாட்டரி ஒழிந்து இருக்காது. 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து இருக்காது. இந்தியாவில் 108 ஆம்புலன்சு வந்து இருக்காது. மது ஒழிப்பு பிரசாரமும் இருந்து இருக்காது. புகையிலை ஒழிந்து இருக்காது.

    இப்படி ஆட்சியில் இல்லாமலேயே எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகிறது. இதுதான் வளர்ச்சி அரசியல். வெற்றி அரசியல். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தால் அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். ஆனால் ஊடகங்கள் கூட்டணி என்று சொல்கிறார்கள். நமது இலக்கு தமிழகத்தின் வளர்ச்சிதான்.

    சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள். என்னிடம் சிலர், ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சுட்டிக்காட்டி தினமும் பேட்டி கொடுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள் என்கிறார்கள். சிலர் வாட்ச்-ஐ காட்டுகிறார்கள். அது நமக்கு தேவையில்லை. மக்கள் மத்தியில் நமக்கான சூழ்நிலை நிலவுகிறது.

    அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது. தி.மு.க. மீதான மக்களின் விமர்சனம் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் சத்தம்தான் போடுகிறார்கள்.

    தமிழகத்தில் 2 பெரிய சாதிகள் உள்ளன. ஒன்று ஆதிதிராவிடர். மற்றொன்று வன்னியர். இந்த இரு சமூகத்தினரும் தலா 20 சதவீதம் உள்ளனர். அதில் ஆதிதிராவிட மக்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும். இந்த 2 சமுதாயமும் வளர்ந்தால்தான் தமிழகம் முன்னேறும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வையின் ஆத்திசூடியை போன்று தானே எழுதிய ஆத்திசூடி ஒன்றை படித்தார்.

    • வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
    • இதனால் புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.

    புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளிவிளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் வல்லவன் அறிவித்துள்ளார்.

    • மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
    • ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.

    உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

    வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.

    எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×