search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை
    X

    சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை

    • கிறிஸ்தவ சபைகளில் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும்.
    • கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    ஆங்கில புத்தாண்டை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் சமீப காலமாக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    2022-ம் ஆண்டு இன்று முடிந்து புதிய ஆண்டு 2023 பிறப்பதை வரவேற்கும் வகையிலும் இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்து பராமரித்து வந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும். குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்த டிஸ்ட், ஆற்காடு லூத்தரன், பெந்தேகொஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளில் இரவு 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்குகிறது.

    பழைய வருட ஆராதனையாக நன்றி ஏறெடுப்பு இதில் முக்கிய அம்சமாக இடம் பெறும். சரியாக இரவு 12 மணி ஆராதனையுடன் புதிய ஆண்டிற்கான ஆராதனை தொடங்கும். புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணக்கு ஆலயங்களில் பட்டாசு வெடித்தும், மின் விளக்கை சில நிமிடங்களில் அனைத்தும் வரவேற்பார்கள்.

    ஹேப்பி நியூ இயர் என கோஷங்கள் கூறி ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அன்பின் வெளிப்பாடாக கட்டி அரவணைத்தும் வாழ்த்துக்களை கூறுவர்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், அண்ணா நகர், பெரம்பூர் லூர்துமேரி, பரங்கி மலை, மாதவரம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க திருச்சபை ஆலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதே போல் செயின்ட் கதிட்ரல் ஆலயம், சூணி பறல், ஆருட்ரா, ராயப் பேட்டை வெஸ்லி, சிந்தாரிப் பேட்டை சியோன், பிராட்வே வண்ணாரப் பேட்டை, தாம்பரம், சேலை யூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் பிற ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடக்கி றது.

    புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. நட்சத்திரங்கள், ஆலயத்தை சுற்றி தொங்க விடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.

    வழக்கத்தை விட எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமியானா பந்தல் மற்றும் சிறப்பு கூடாரங்கள் அமைத்து உள்ளனர்.

    புத்தாண்டு சிறப்பு வழிபாடு முடிந்தவுடன் அனைவருக்கும் தேனீருடன் கேக் வழங்கப்படும். புத்தாண்டையொட்டி முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×