என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் மற்றும் கல்லூரி என்ஜினீயரிங் விளையாட்டு குழு இயக்குனர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் மற்றும் கூடப்பாக்கம் உடற் கல்வி விரிவுரையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
    • தெருக்களில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.

    இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போதே ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. நகரில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமாகவே உள்ளது.

    குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சின்னவீராம்பட்டினம் கடற்கரை, பாரடைஸ் பீச், சுண்ணாம் பாறுபடகு குழாம் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வருகையால் தற்போதே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக கடற்கரை, ஓட்டல்களில் மது விருந்து, இசை நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜோடியாக வருபவர்கள், குடும்பத்துடன் வருவோர் என தரம் பிரித்து விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வாகன நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நகரப் பகுதியில் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    தெருக்களில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர்.

    • கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

    புதுச்சேரி:

    கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து விபத்தை தடுக்கும் விதமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தற்காலிக விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகார்டு மற்றும் பேரல்கள் போட்டு இரு வழி சாலையாக வைத்திருந்தனர்.

    மேலும் பேரிகார்டுக்கு இடையே யாரும் செல்ல முடியாதபடி குருக்கில் மர கம்பத்தை கட்டி வைத்திருந்தனர். இதனால் வாகனத்தின் வேகம் மற்றும் விபத்தை குறைக்க முடிந்தது.

    இந்த நிலையில் சாலைக்கு நடுவில் போடப்பட்ட. பேரிகார்டுகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் இருந்த மர கம்பங்கள் சேதமாகியும், இல்லாமலும் இருந்து வருகிறது.

    தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது. அரியாங்குப்பம் முதல் கன்னியகோவில் வரை கடந்த சில தினங்களில் மட்டும் பேரிகார்டுகளால் 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

    பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் மற்றும் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் உடனடியாக தற்காலிகமாக போடப்பட்ட பேரிகார்டுகளை சரிசெய்ய வேண்டும். வரும் புத்தாண்டிற்கு புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. புத்தாண்டில் விபத்தில்லா புதுவையாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.

    புதுச்சேரி:

    சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.

    இதனால் மடுகரையிலிருந்து வரும் வாகனங்கள் திருக்கனூரில் இருந்து வரும் வாகனங்கள், புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் சொல்ல முடியாமல் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.

    அந்த வேலை பெண் ஊழியர்கள் நீண்ட தூரம் தள்ளி வேனை இயக்க உதவி செய்தனர்.

    மதகடிப்பட்டு திருபுவ னை பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குகின்றன. இந்தப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. (வயது 44). சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த ஒருவருடமாக பழனிக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் பழனி வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு வங்கிக்கு செல்ல தயாரானார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி சுப்புலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பழனி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
    • போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி புதுவை 3-ம் வட்டத்தின் ஏற்பாட்டில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை துணை இயக்குனர் சிவக்குமார், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் சுதா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேரோனாஸ் விஜயலட்சுமி, கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் லிங்கசாமி, மாநில போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 360 வீரர், வீராங்கனைகள் மற்றும் 60 நடுவர்கள் பங்கேற்றனர்.

    2 நாட்கள் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு 3-ம் வட்டத்தின் செயலர் பழனி வரவேற்றார். ஓய்வு பெற்ற மூத்த உடற்கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 3-ம் வட்டத்தின் உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் தொகுத்து வழங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிவசாமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
    • கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி புதுவை மாநில அரசு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத் சிதுகளுக்கு சில வழிகாட்டுதலை பின்பற்ற கூறியுள்ளது.

    இது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் கொம் யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொழுதுபோக்கு மற்றும் உணவக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட் பட்ட அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை நிறுவனங் கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண் டும்.

    முககவசம், தடுப்பூசிகள் செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்களில் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    • புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது.
    • 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி..மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வெறும் ரூ. 500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு அளிப்பதாக கூறியிருப்பது மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவைகளோடு ரூ.ஆயிரம் வழங்குவது என அறிவித்துள்ளது. 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    தமிழகத்தைப்போல் புதுவையிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாத அரிசிக்கு பதிலாக பணத்தை பொங்கலுக்கு முன்பு வழங்க வேண்டும்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தலித் மக்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால வேட்டி, சேலை திட்டத்தின் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக காலத்தோடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    பாரதிய நியாயவிலை கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு கவுரவ தலைவர் ஆசைத்தம்பி, தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தனர். துணைத்தலைவர் ரமேஷ், செயலாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அருள், வினோத்குமார், சக்திவேல், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    நேரடி பணி பரிமாற்ற முறையை நிறுத்த வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களின் 55 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும்.

    நேரடி பணி பரிமாற்ற முறையை ரத்து செய்யக்கோரி அமைச்சரவை அனுப்பிய கோப்புக்கு அனுமதி வழங்காத கவர்னரை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ரேஷன் கடை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் பங்கேற்றனர்.

    மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வார் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வாருதலும், கோட்டைமேடு கிராம பஞ்சாயத்தில் உள்ள வில்லியனூர் வாய்க்கால் ஆலப்படுத்துதல் பணிக்கான தொகை ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும் நடைபெறுகிறது.

    இதற்கான பணிகளை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் விஜய் அருணாச்சலம், கிராமத்திட்ட ஊழியர்கள் பிரதாப் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கூட்டாட்சி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கூட்டாட்சி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கூட்டாட்சியை பாதுகாத்திட வலியுறுத்தியும், கவர்னர் பதவியை ரத்து செய்திட கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, அமுதா, மாநில குழு உறுப்பினர்கள் அபிஷேகம், ராமமூர்த்தி, கீதநாதன், தயாளன், தொகுதி செயலாளர்கள் துரைசெல்வம், பெருமாள், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாக்கம் அழிக்கப்படுகின்றது. கூட்டாட்சி முறை சிதைக்க ப்படுகின்றது.

    கவர்னர் பதவிகள் மூலம் மாநில அரசின் நடவடிக்கை களில் தலையிட்டு மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசின் கைப்பாவையாக மாற்ற முயற்சிக்கிறது.

    பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் போட்டி அரசாங்கத்தை நடத்துகின்றது. இதற்கு உதாரணமாக புதுவை திகழ்கிறது. மத்திய அரசின் மாநில உரிமைகளுக்கு எதிரான செயலினை நடைமுறைப்படுத்தும் கவர்னர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சிவமணி (வயது 43). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
    • மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துக்கிருஷ்ணன் கீழே விழுந்ததில் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சிவமணி (வயது 43). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி அளவில் ஏரிப்பாக்கம் கடை தெருவிற்கு சென்று விட்டு பின்னர் கடலூர் ரோடு வழியாக நடந்து வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம், புதுப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24) என்ற வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவமணி மோதியது.

    இதில் சிவமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துக்கிருஷ்ணன் கீழே விழுந்ததில் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த மக்கள் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிவமணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×