என் மலர்
புதுச்சேரி

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
- நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சிவமணி (வயது 43). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
- மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துக்கிருஷ்ணன் கீழே விழுந்ததில் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தை அடுத்த ஏரிப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சிவமணி (வயது 43). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி அளவில் ஏரிப்பாக்கம் கடை தெருவிற்கு சென்று விட்டு பின்னர் கடலூர் ரோடு வழியாக நடந்து வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம், புதுப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24) என்ற வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவமணி மோதியது.
இதில் சிவமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துக்கிருஷ்ணன் கீழே விழுந்ததில் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த மக்கள் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிவமணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






