என் மலர்
நீங்கள் தேடியது "broken down van"
- சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.
- இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.
புதுச்சேரி:
சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பகுதிக்காக மேற்கு பகுதியில் களிமண் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் மடுகரையிலிருந்து வரும் வாகனங்கள் திருக்கனூரில் இருந்து வரும் வாகனங்கள், புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள் சொல்ல முடியாமல் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இந்த நிலையில் வளவனூரில் இருந்து மதகடிப்பட்டு வழியாக தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் பழுதாகி நடுரோட்டில் நின்றது.
அந்த வேலை பெண் ஊழியர்கள் நீண்ட தூரம் தள்ளி வேனை இயக்க உதவி செய்தனர்.
மதகடிப்பட்டு திருபுவ னை பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குகின்றன. இந்தப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலைக்கிராமங்களில் ஓட்டை, உடைசலான பஸ்களே இயக்கப்படுகிறது.
- இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைப்பகுதிக்கு முறையாக பஸ்கள் இயக்க வேண்டும்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக பண்ணைக்காட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பகல் 11.45 மணிக்கு வத்தலகுண்டுவில் இருந்து புறப்படும். இந்த பஸ் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, தாண்டிக்குடி வழியாக பண்ணைக்காடு செல்கிறது.
நேற்று இந்த அரசு பஸ் பெரும்பாறை வழியாக பண்ணைக்காடு சென்றது. அப்போது பஸ்சின் பின்னால் டயர் பஞ்சரானது. அதனால் பண்ணைக்காடு செல்லாமல் தடியன்குடிசைக்கு திரும்பியது. மங்களம்கொம்பு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு சென்ற பயணிகள் மாற்று பஸ்சில் சென்றனர். மலைச்சாலைகளில் இயக்கப்படும் அரசு பஸ் பெரும்பாலும் தரமற்றதாக உள்ளது என டிரைவர்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் தெரிவிக்கையில், இந்த மலைக்கிராமங்களில் ஓட்டை, உடைசலான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றோம். குறிப்பாக குறித்த நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைப்பகுதிக்கு முறையாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






