என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
    • எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தீவிர முயற்சியால், இரும்பு கம்பம் அமைத்து எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    இதனை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் செல்வராஜ், தொகுதி பா.ஜனதா தலைவர் சாய் தியாகராஜன், ஊசுடு தொகுதி மின்துறை பொறுப்பாளர் ஆனந்த், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பில்7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
    • புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பில்7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

    முகாமின் நிறைவு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பேட்ரிக் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாநில அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் பள்ளி முதல்வர் அல்போன்ஸ் கிளிட்டா, புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

    பள்ளி விரிவுரையாளர் நடராஜ், உடற்கல்வி ஆசிரியர் பாலன் மற்றும் ஆசிரியர் ஹேமந்த் முன்னிலை வகித்தனர்

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.
    • போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

    போட்டியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டி நடுவர்களுக்கு சீருடை வழங்கினார். புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்துக்கு பின்புறம் கரோன் வீதி, ஷர்மோன் வீதியில் பாதாள கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி சாலையில் வழிந்தது.
    • இதையடுத்து தி.மு.க. மாநில துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்துக்கு பின்புறம் கரோன் வீதி, ஷர்மோன் வீதியில் பாதாள கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி சாலையில் வழிந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் ஆலயத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை இருந்து வந்தது.

    எனவே இதனை சுத்தம் செய்து தருமாறு அருட்தந்தை குழந்தைசாமி தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து தி.மு.க. மாநில துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து இதனை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கர் கழிவுநீர் உறிஞ்சி எடுக்கும் வாகனத்தை வரவழைத்து அங்கிருந்த கழிவுநீரை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார்.

    பிறகு அங்கு கிருமிநாசினி, வாசனை திரவங்கள் தெளிக்கப்பட்டு மேற்கொண்டு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் போது தி.மு.க. மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ், கவுதமன், பாலாஜி, ரகுமான், லாரன்ஸ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது.
    • நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது.

    அதோடு இந்த மாதங்களில் புதுவை குளிர்பிரதேசம் போல் சில்லென்ற குளிர்ந்த காற்றுடன் வரவேற்பது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. இதனால் புதுவை நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது. நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு என்றாலே மது விருந்துதான். பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது. விலை குறைவு மட்டுமல்லாது விதவிதமான மதுவகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுவையை நோக்கி இழுக்கிறது.

    இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபார்கள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்களின் உள் அமைப்புகள் மதுபிரியர்களை கவரும் வகையில் மின்னொலியில் ஜொலிக்கின்றன.

    மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.

    ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது.

    மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது.

    புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.

    • புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
    • இதேபோல ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. ஆட்டோ சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

    தகவலறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த புதுவை அ.தி.மு.க.வினர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்து பொருளாளர் ரவிபாண்டுரங்கன் தலைமையில் ஊர்வலமாக ஓதியஞ்சாலை போலீஸ் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.

    அவர்களை வாட்டர் டேங்க் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தீயணைப்பு நிலைய வளாகத்தில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல ஓதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. ஆட்டோ சங்கத்தினர் முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்ட அன்பழகனை விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

    • புதுவையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டுள்ளது.
    • மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    உலக நாடுகளில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

    மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 1-ந் தேதி அதிகாலை ஒரு மணிக்குமேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகளில் தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் 2 தவணை தடுப்பூசிகள் போட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்குச் செல்லும்போது அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள்மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

    ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனர் என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்புக்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கொரோனாவை தடுக்க புதுவையில் 8 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் வல்லவன் கூறும்போது, புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆக்சிஜன் வசதி, 2 ஆயிரம் ஸ்டெபிலைசர்கள், 125 வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டு ள்ளது. தனியார் மருத்துவ மனையிலும் பரிசோத னைகள் மேற்கொ ள்ளப்படும். ஜினோம் பரிசோதனை புதுவையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. பொதுமக்கள் பீதியடையாமல், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி உட்பட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வகத்தை கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.பி.ரமேஷ் முன்னிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அரசு செயலர் உதய குமார், இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் நந்திதா பனாஜி, நோடல் அதிகாரி சீனிவாசன், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் மற்றும் பிற முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் பிற துணைப் பணியாளர்கள் பங்குபெற்றனர்.

    இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன. ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா கிருமியை சரியாக கண்டறிய முடியும்.

    எந்த உருவம் எந்தவொரு கிருமி மாறினாலும் அதனை இந்த ஆய்வகம் மூலம் கண்டறிந்து விடலாம். மரபணு பகுப்பாய்விற்கு பிற மாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய தேவை தவிர்க்கப்படும்.

    இந்த ஆய்வகம் ஒரு இணைப்பு மையமாக செயல்பட்டு புதுவை, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை செய்யும். இந்த நவீன ஆய்வகம் கொரோனாவுக்கு மட்டுமின்றி, வரும் காலங்களில் எந்த கிருமிகள் மூலம் தொற்று ஏற்பட்டாலும், இதர பல கிருமிகளை பற்றியும் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.
    • கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். மாநில அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே நலத்திட்டங்களைக் கொண்டு வர முடியும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    மாநில அந்தஸ்து பெறுவது பற்றி உறுதியாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக முதல்-அமைச்சர் இறங்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

    கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அமைச்சரவையில் மாநில அந்தஸ்து பற்றி ஒருமனதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒருவேளை அவரின் சகோதரியான கவர்னர் மன உளைச்சலை தீர்த்து விட்டதால் முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து பற்றி இனிமேல் பேச மாட்டாரா?

    முதல்-அமைச்சர் நிலைப்பாடு தெரியாமல் புதுவையில் தேவையின்றி பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநில அந்தஸ்து கோரி போராட்டம், பந்த் என சொல்வது முதிர்ந்த அரசியலாக தெரியவில்லை. எல்லாம் நாடகமயமாகி வருகிறது. இது மாநில சட்ட ஒழுங்கை பாதித்து மக்களை பிளவுபடுத்தி மாநில அந்தஸ்துபிரச்சினையை திசை திருப்பும்.

    முதல்-அமைச்சருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதில் உண்மையான அக்கறை இல்லை என தோன்றுகிறது. அதிகாரிகளும், கவர்னரும் தனக்கு வேண்டிய காரியங்களில் ஒத்துழைத்தால் போதும் என்ற நிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது.

    மின்துறை தனியார்மய ஊழல், மதுபான தொழிற்சாலை ஊழல், குப்பை டெண்டர் ஊழல், சாலை ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் மாநில அந்தஸ்து அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் என மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

    எனவே எதையாவது முதல்-அமைச்சர் வெளிப்படையாக மக்களிடம் சொல்ல வேண்டும். புதுவை அமைதியாக வேண்டும். இல்லாவிட்டால் மாநில அந்தஸ்து நாடகத்திற்காக முதல்-அமைச்சர் சங்கரதாஸ்சாமி விருதை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் நின்றபட 2 பேர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொண்டிருந்ததை கண்டனர்.

    புதுச்சேரி:

    ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.

    புதுவை முதலியார்பேட்டை அவ்வை வீதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் நின்றபட 2 பேர் செல்போனில் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொண்டிருந்ததை கண்டனர்.

    இதனைதொடர்ந்து 2பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொசப்பாளையம் செல்லபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரை சேர்ந்த ராஜி(78) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி முடிவுகளை எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகம், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.9 ஆயிரத்து 250 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியபேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரமற்று வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
    • பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியபேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரமற்று வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

    அதோடு, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் தொய்வு, பல்வேறு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பது, புதிய போர்வெல் அமைப்பது, எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை எரிய வைப்பது, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் ஏ.எப்.டி. குடிநீர் திட்டப் பணியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைப்பது, சுல்தா ன்பேட்டை, வில்லியனூர், கொம்பாக்கம், ஜி.என். பாளையம், திரிவேணி நகர், ஒட்டாம்பாளையம் வெங்கடேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய போர்வெல் அமைப்பது, தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் ரூ. 50 கோடி மதிப்பில் மேற்கொள்ள உள்ளதாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

    மேலும், பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை உடனடியாக பராமரிக்க வேண்டும், சுல்தா ன்பேட்டை, வில்லியனூர் பத்மினி நகர், கொம்பா க்கம்பேட் ஆகிய 3 இடங்களில் உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குடிநீர் சுகாதாரமற்று வரும் உத்திர வாகினிப்பேட் பகுதியில் உடனடியாக ஒரு போர்வெல் அமைத்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கவும், நெடுஞ்சாலைகளில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும், வில்லியனூர் தொகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்வது, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை யை மேம்படுத்துவது, இருபுறமும் மின் விளக்கு, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில், கண்காணி ப்புப் பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர்கள் சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவே ங்கடம், சங்கர்,ஞானவேல் மற்றும் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வ நாதன், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி தொகுதி செயலாளர் மணிகண்டன், ரமணன், கொம்பாக்கம் ஜெகன், ஜெனா, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய யோகா கூட்டமைப்பு 41-வது தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் 2022-23 தொடக்க விழா 26-ந் தேதி வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் பள்ளி முதன்மை கட்டிடத்தில் நடைபெற்றது.
    • இதில் புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்க பொதுசெயலாளர் ரகுமான், தலைவர் டாக்டர்.

    புதுச்சேரி:

    புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய யோகா கூட்டமைப்பு 41-வது தேசிய யோகாசன சாம்பியன்ஷிப் 2022-23 தொடக்க விழா 26-ந் தேதி வாணரப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் பள்ளி முதன்மை கட்டிடத்தில் நடைபெற்றது.நாளை வரை போட்டி நடக்கிறது.

    போட்டியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் புதுவை அமெச்சூர் யோகா மற்றும் விளையாட்டு சங்க பொதுசெயலாளர் ரகுமான், தலைவர் டாக்டர். ஆரோக்கியராஜ் சீசர் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன், அமலோற்பவம் பள்ளி நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்து சாமி இந்திய யோகா கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் புரோஹித், இந்திய யோகா கூட்டமைப்பு ஜெனரல் மிருணாள் காந்தி, சக்ரவர்த்தி, யோகா விளையாட்டு போட்டி தலைவர் கோவிந்தராஜ், சென்னை யோகா விளையாட்டு மேம்பாட்டு சங்க தலைவர் முருகன், மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் ராகேஷ், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×