search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எல்.இ.டி. விளக்கு அமைக்கும் பணி-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    X

    பத்துக்கண்ணு முதல் ஊசுட்டேரி வரை இரும்பு கம்பத்துடன் கூடிய எல்.இ.டி. விளக்கு அமைக்கும் பணியினை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    எல்.இ.டி. விளக்கு அமைக்கும் பணி-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
    • எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தீவிர முயற்சியால், இரும்பு கம்பம் அமைத்து எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    இதனை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் செல்வராஜ், தொகுதி பா.ஜனதா தலைவர் சாய் தியாகராஜன், ஊசுடு தொகுதி மின்துறை பொறுப்பாளர் ஆனந்த், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×