என் மலர்
புதுச்சேரி

நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் பேட்ரிக் பள்ளி தாளாளர், பேட்ரிக் கோஜூரியோ காரத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு
- புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பில்7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
- புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பில்7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
முகாமின் நிறைவு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பேட்ரிக் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாநில அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் பள்ளி முதல்வர் அல்போன்ஸ் கிளிட்டா, புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
பள்ளி விரிவுரையாளர் நடராஜ், உடற்கல்வி ஆசிரியர் பாலன் மற்றும் ஆசிரியர் ஹேமந்த் முன்னிலை வகித்தனர்
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.






