என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை

    • புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது.
    • 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி..மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுவை அரசு ஒவ்வொரு பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இந்த ஆண்டும் அறிவிப்பு செய்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் வெறும் ரூ. 500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு அளிப்பதாக கூறியிருப்பது மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவைகளோடு ரூ.ஆயிரம் வழங்குவது என அறிவித்துள்ளது. 2 கோடிக்குமேல் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெறும் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 500 அளிப்பது ஏமாற்றும் வித்தையாகும்.

    தமிழகத்தைப்போல் புதுவையிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மாத அரிசிக்கு பதிலாக பணத்தை பொங்கலுக்கு முன்பு வழங்க வேண்டும்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தலித் மக்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால வேட்டி, சேலை திட்டத்தின் தொகையையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக காலத்தோடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×