என் மலர்
புதுச்சேரி
- பெண் குழந்தை சஹானா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தது.
- பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி:
குழந்தையை மீட்டு உடனடியாக வாகனம் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த ரிசார்ட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுவை வந்த குடும்பத்தினர் குழந்தையை இழந்த சம்பவம் அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவையில் காதலி தற்கொலை செய்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன்சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த்திட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராதாகிருஷ்ணன்சாய் (வயது19). கல்லூரி மாணவரான இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியும், கேளம் விளையாட்டு வீராங்கனையுமான ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்ததும் அவர் தனது தங்கையை கண்டித்து வந்தார். மேலும் ராதாகிருஷ்ணன் சாயிடமும் தனது தங்கையிடம் பழக வேண்டாம் என்று கூறினார்.
இதனால் ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் பேசி பழகி வந்ததை நிறுத்திக்கொண்டார். ஆனாலும், அந்த பெண் வலிய சென்று ராதாகிருஷ்ணன் சாயை அவரது வீட்டில் சந்தித்து பேசி வந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அந்த பெண்ணை அவரது சகோதரர் கண்டித்து எச்சரிக்கை செய்தார். இதனால் விரக்தியில் இருந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சாய் வீட்டுக்கு சென்று அங்குள்ள மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராதாகிருஷ்ணன்சாய் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இறந்து போன காதலியின் நினைவாகவே அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன்சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலி தூக்கு போட்டு இறந்து சில நாட்களில் கல்லூரி மாணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பஞ்சவடியில் ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் கீழ் இயங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.
- 2023 புத்தாண்டையொட்டி 2023 கிலோவில் பூந்தி தயாரிக்கப்பட்டு லட்டு பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பஞ்சவடியில் ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் கீழ் இயங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.
புத்தாண்டையொட்டி பொதுமக்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
3 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளும் விஸ்வரூபம் கண்டருளியப்பட்டது. தொடர்ந்து ராமர் பாதுகைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட விசேஷ திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.
10 மணிக்கு பாலாம்பாளின் வயலின் கச்சேரி நடந்தது. சென்னையைச் சேர்ந்த ஒரு பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க பஞ்சமுக ஆஞ்சநேயர் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
2023 புத்தாண்டையொட்டி 2023 கிலோவில் பூந்தி தயாரிக்கப்பட்டு லட்டு பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதேசியையொட்டி சீனிவாச பெருமாளுக்கு விசேஷ மோகினி அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
நாளை காலை 5 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாளின் துணைவியார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக ஆச்சாரியன் ஆழ்வார்க ளுக்கு அருள் பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து புஷ்ப பந்தல் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேஷ மண்டபத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார்.
இந்நிகழ்ச்சியினை பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன் தலைமையில் அறங்காவலர்கள் நரசிம்மன், டாக்டர் பழனியப்பன், செல்வம், நடராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் உடல் பரிசோதனை செய்தனர்.
- புதுவையில் காதலி தற்கொலை செய்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த காதல் விவகாரம் பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்ததும் அவர் தனது தங்கையை கண்டித்து வந்தார். மேலும் ராதாகிருஷ்ணன் சாயிடமும் தனது தங்கையிடம் பழக வேண்டாம் என்று கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் காதலி தற்கொலை செய்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை தேங்காய்த்திட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராதாகிருஷ்ணன்சாய் (வயது19). கல்லூரி மாணவ ரான இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியும், கேரம் விளையாட்டு வீராங்கனையுமான ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்ததும் அவர் தனது தங்கையை கண்டித்து வந்தார். மேலும் ராதாகிருஷ்ணன் சாயிடமும் தனது தங்கையிடம் பழக வேண்டாம் என்று கூறினார்.
இதனால் ராதா கிருஷ்ணன் அந்த பெண்ணி டம் பேசி பழகி வந்ததை நிறுத்திக்கொண்டார். ஆனாலும், அந்த பெண் வலிய சென்று ராதாகிருஷ்ணன் சாயை அவரது வீட்டில் சந்தித்து பேசி வந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அந்த பெண்ணை அவரது சகோதரர் கண்டித்து எச்சரிக்கை செய்தார். இதனால் விரக்தியில் இருந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சாய் வீட்டுக்கு சென்று அங்குள்ள மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராதாகிருஷ்ணன்சாய் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இறந்து போன காதலி யின் நினைவாகவே அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன்சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலி தூக்கு போட்டு இறந்து சில நாட்களில் கல்லூரி மாணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆங்கில புத்தாண்டு கொண்ட்டாடப்பட்டது. புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 பெரிய ஓட்டல்கள் தவிர மற்ற ஓட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
- தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் யாரையும் கோட்டக்குப்பம் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
புதுச்சேரி:
ஆங்கில புத்தாண்டு கொண்ட்டாடப்பட்டது.
புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 பெரிய ஓட்டல்கள் தவிர மற்ற ஓட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்களிலும் ரிசார்ட்டு களிலும் அறை எடுத்து தங்கிய சுற்றுலாப் பயணிகள் அங்கேயே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் யாரையும் கோட்டக்குப்பம் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை சறுக்கு பாலத்தில் தந்திராயன்குப்பம் செல்லும் வழி மூடப்பட்டது. இருந்தும் அங்கு 200-க்கும் மேற்பட்ட வெளியூர் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அம்பர்லா பலூன்களை வானில் பறக்க விட்டு உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். பின்னர் கோட்டகுப்பம் போலீசார் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து கடற்கரையில் இருந்து அனைவரையும் பாதுகாப்போடு அப்புறப்படுத்தினர்.
- வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
- உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
இக்கோவில் பித்ரு தோஷம் நீக்கும் தலமாகவும், அகதியர் அருளிய மூர்த்தியாகவும், விளங்கிறது. இந்த கோவிலில் அவ்வப்போது சிறப்பு நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.
இந்த கோவிலில் புத்தாண்டு தினமான (ஞாயிற்றுக்கிழமை) உலக நன்மை வேண்டி மகா யாகம் நடந்தது.
7 மணிக்கு ஸ்ரீ நவசக்திபீடம் சார்பில் உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவசக்திபீடம், ஆன்மிக ரத்னா ஸ்ரீலஸ்ரீசீனிவாச சுவாமிகள், சிறப்பு அதிகாரி சீத்தாராமன், செயல் அதிகாரி சதீஷ், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- புதுவை தொழில்நுட்ப கல்லூரி தரம் உயர்த்தி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. இப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் உன்னதமானவை.
- துணைவேந்தரை தவிர்த்து வேறு ஒருவரை வேந்தராக நியமிப்பது சரியாக இருக்காது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை தொழில்நுட்ப கல்லூரி தரம் உயர்த்தி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. இப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் உன்னதமானவை.
தொழில்நுட்பம், மேலா ண்மை , கட்டிடக்கலை மற்றும் வளர்ச்சி அடைந்த விஞ்ஞான பாடங்களில் முதல் தரமான கல்வியை அளித்து நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தேவையான முதல் தர மனித வளத்தை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள்மூலம் உருவாக்குவது இதன் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். 2 ஆண்டாக நிர்வாக குழுவை கவர்னர் நியமிக்கவில்லை. சட்டப்பிரிவு 15(3)ன் படி நிர்வாக குழுவின் தலைவராக துணைவேந்தர் இருக்க வேண்டும்.
துணைவேந்தரை தவிர்த்து வேறு ஒருவரை வேந்தராக நியமிப்பது சரியாக இருக்காது. சென்னை, டெல்லி, புதுவை பல்கலைக்கழகங்கள் துணைவேந்தரையே நிர்வாக குழுவின் தலைவராக நியமித்துள்ளன.
இந்த உதாரணங்களைப் பின்பற்றி புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் தலைவராக துணைவேந்தரை நியமித்து குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆங்கில புத்தாண்டையொட்டி உப்பளம் திப்புராயப்பேட் மருத்துவமனை யில் உள்ள தொழுநோயாளிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி போர்வைகள் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிரா விட அணி தங்கவேல், இளைஞர் அணி ராஜி,பலரும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஆங்கில புத்தாண்டையொட்டி உப்பளம் திப்புராயப்பேட் மருத்துவமனை யில் உள்ள தொழுநோயாளிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி போர்வைகள் வழங்கினார். மார்கழி மாத குளிரை கருத்தில் கொண்டு அருகில் இருந்த முதியவர்களுக்கும் போர்வைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ெதாகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிரா விட அணி தங்கவேல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செய லாளர்கள் செல்வம், மணிகண்டன், ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
- பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
தேக்வோண்டோ பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான தேக்வோண்டோ நடுவர் பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.
சர்வதேச தேக்வோண்டோ நடுவர் முகமது ஆஷிக் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தை சேர்ந்தவர் சர்வதேச நடுவர் பரத்சிங், தேசிய நடுவர்களான பாலசுப்பிரமணியன், பஞ்சுநாதன், நந்தகுமார், சார்லஸ், கீர்தன், அரவிந்த் செல்வன், ஜெயசூர்யா, மதன் மற்றும் தஷ்னபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் புதுவை திரும்பிய இவர்களுக்கு புதுவை தேக்வோண்டோ சங்க நிறுவனர் மற்றும் தலைவரான மாஸ்டர் லேனின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- புதுவையில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு காலண்டரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டு வந்தது.
- இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் பெயரில் காலண்டர் அச்சடிக்கும் பணி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவையில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு காலண்டரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டு வந்தது. காகிதம் இல்லாத நிர்வாகத்தின் அடிப்படையில் முன்னாள் கவர்னர் கிரண்பேடி டைரி வெளியிட தடை விதித்தார். இதன் அடிப்படையில் புதுவையில் டைரி மற்றும் காலண்டர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் பெயரில் காலண்டர் அச்சடிக்கும் பணி நடைபெற்றது. 3 ஆண்டுக்கு பிறகு காலண்டர் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி காலண்டரை வெளியிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள், ஏ.கே.டி. ஆறுமுகம், பி.ஆர்.சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
காலண்டர் முகப்பில் புதிய மேரி கட்டிடம், ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காமராஜர் மணி மண்டபம், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கார்டன், திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்ணி , காரைக்கால் பெரிய பள்ளிவாசல், பாரதி பூங்கா வர்த்தக சபை, புதுவை கடலில் படகு சவாரி, மஸ்கராத் நடனம், திருநள்ளாறு ஆன்மீகப் பூங்கா, மாகி கடற்கரை பகுதி, ஏனாம் அம்பேத்கர் விஞ்ஞான் பவன், சித்தேரி படுகை அணை, கப்ஸ் கோயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதில் பெரும்பாலான படங்களை புதுவை புகைப்பட கலைஞர் அருண் எடுத்துள்ளார். இந்த காலண்டர் அனைத்தும் ஒரே நாளில் புதுவை அரசின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
- புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக பதிவு செய்தவர்களிடம் சந்தா தொகையாக ரூ.ஆயிரத்து 500 வசூலிக்கப்படும். இதற்கு 2 மடங்கு இணையாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் பங்குத்தொகை சேர்த்து ரூ.4 ஆயிரத்து 500 வீதம் மீனவ பயனாளிக்கு வழங்கப்படும். இதன் முதல் பகுதியாக புதுவையை சேர்ந்த 30 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 175, காரைக்காலில் 17 சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 815, மாகியை சேர்ந்த 352, ஏனாமை சேர்ந்த 559 உறுப்பினர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 977 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வீதம் ரூ.8 கோடியே 53 லட்சத்து 96 ஆயிரத்து 500 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், கென்னடி, பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வ ளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
- தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புத்தாண்டு தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலக நன்மை வேண்டி மகா யாகம் நடக்கிறது.
7 மணிக்கு ஸ்ரீ நவசக்திபீடம் சார்பில் உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவசக்திபீடம், ஆன்மிக ரத்தினா, ஸ்ரீலஸ்ரீசீனிவாச சுவாமிகள், சிறப்பு அதிகாரி சீத்தாராமன், செயல் அதிகாரி சதீஷ், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.






