என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    துணைவேந்தர் தலைமையில் நிர்வாகக்குழு நியமிக்க வேண்டும்-முன்னாள் எம்.பி.  ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    துணைவேந்தர் தலைமையில் நிர்வாகக்குழு நியமிக்க வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

    • புதுவை தொழில்நுட்ப கல்லூரி தரம் உயர்த்தி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. இப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் உன்னதமானவை.
    • துணைவேந்தரை தவிர்த்து வேறு ஒருவரை வேந்தராக நியமிப்பது சரியாக இருக்காது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை தொழில்நுட்ப கல்லூரி தரம் உயர்த்தி பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது. இப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் உன்னதமானவை.

    தொழில்நுட்பம், மேலா ண்மை , கட்டிடக்கலை மற்றும் வளர்ச்சி அடைந்த விஞ்ஞான பாடங்களில் முதல் தரமான கல்வியை அளித்து நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தேவையான முதல் தர மனித வளத்தை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள்மூலம் உருவாக்குவது இதன் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும். 2 ஆண்டாக நிர்வாக குழுவை கவர்னர் நியமிக்கவில்லை. சட்டப்பிரிவு 15(3)ன் படி நிர்வாக குழுவின் தலைவராக துணைவேந்தர் இருக்க வேண்டும்.

    துணைவேந்தரை தவிர்த்து வேறு ஒருவரை வேந்தராக நியமிப்பது சரியாக இருக்காது. சென்னை, டெல்லி, புதுவை பல்கலைக்கழகங்கள் துணைவேந்தரையே நிர்வாக குழுவின் தலைவராக நியமித்துள்ளன.

    இந்த உதாரணங்களைப் பின்பற்றி புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் தலைவராக துணைவேந்தரை நியமித்து குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×