search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மகா யாகம்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
    X

    மகா யாகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    மகா யாகம்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு

    • வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.
    • உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே காசியினும் வீசம் பெற்ற திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றக்கரையில் அமைந்துள்ளது.

    இக்கோவில் பித்ரு தோஷம் நீக்கும் தலமாகவும், அகதியர் அருளிய மூர்த்தியாகவும், விளங்கிறது. இந்த கோவிலில் அவ்வப்போது சிறப்பு நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.

    இந்த கோவிலில் புத்தாண்டு தினமான (ஞாயிற்றுக்கிழமை) உலக நன்மை வேண்டி மகா யாகம் நடந்தது.

    7 மணிக்கு ஸ்ரீ நவசக்திபீடம் சார்பில் உலக நன்மை வேண்டி 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 24 நட்சத்திரம், 12 ராசிகள், 9 கிரகங்கள், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு மகாயாகம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மகாசாந்தி, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நவசக்திபீடம், ஆன்மிக ரத்னா ஸ்ரீலஸ்ரீசீனிவாச சுவாமிகள், சிறப்பு அதிகாரி சீத்தாராமன், செயல் அதிகாரி சதீஷ், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×