என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "balloons in the sky"

    • ஆங்கில புத்தாண்டு கொண்ட்டாடப்பட்டது. புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 பெரிய ஓட்டல்கள் தவிர மற்ற ஓட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
    • தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் யாரையும் கோட்டக்குப்பம் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

    புதுச்சேரி:

    ஆங்கில புத்தாண்டு கொண்ட்டாடப்பட்டது.

    புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 பெரிய ஓட்டல்கள் தவிர மற்ற ஓட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்களிலும் ரிசார்ட்டு களிலும் அறை எடுத்து தங்கிய சுற்றுலாப் பயணிகள் அங்கேயே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் யாரையும் கோட்டக்குப்பம் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை சறுக்கு பாலத்தில் தந்திராயன்குப்பம் செல்லும் வழி மூடப்பட்டது. இருந்தும் அங்கு 200-க்கும் மேற்பட்ட வெளியூர் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அம்பர்லா பலூன்களை வானில் பறக்க விட்டு உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். பின்னர் கோட்டகுப்பம் போலீசார் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து கடற்கரையில் இருந்து அனைவரையும் பாதுகாப்போடு அப்புறப்படுத்தினர்.

    ×