என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மீனவ குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து நிதி அளிக்கும் திட்டம்- ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
- புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்காலம், மழை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வா தாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக பதிவு செய்தவர்களிடம் சந்தா தொகையாக ரூ.ஆயிரத்து 500 வசூலிக்கப்படும். இதற்கு 2 மடங்கு இணையாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் பங்குத்தொகை சேர்த்து ரூ.4 ஆயிரத்து 500 வீதம் மீனவ பயனாளிக்கு வழங்கப்படும். இதன் முதல் பகுதியாக புதுவையை சேர்ந்த 30 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 175, காரைக்காலில் 17 சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 815, மாகியை சேர்ந்த 352, ஏனாமை சேர்ந்த 559 உறுப்பினர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 977 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வீதம் ரூ.8 கோடியே 53 லட்சத்து 96 ஆயிரத்து 500 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுவை சட்டபையில் நடந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், கென்னடி, பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வ ளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.






