என் மலர்
புதுச்சேரி
- ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
- அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஜிப்மரில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கு நிர்வாக அலுவலர் சிவபாலன் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது-
மத்திய குடிமை பணிகள் நடத்தை விதிகள் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றும் ஏ,பி,சி, ஊழியர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ந் தேதியில் அவர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் வைத்திருக்கும் அசையா சொத்தின் முழு விவரங்களையும் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.
- விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி 4 மணிக்கு திருப்பாவையும், 5.30 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.6 மணிக்கு துவாதசி தரிசனமும், 11-ந் தேதி இராப்பத்து சாற்றுமறை உற்சவமும், கூடார வள்ளி ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
- இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
இந்தப் பகுதிக்கு சாலை வசதி அமைத்து கொடுக்க தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.12.16 லட்சம் செலவில் செம்மண் சாலை அமைக்க ஆதிதிராவிடர் மேம்பாட்டு வகைகளை கழகம் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான தொடக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக
இதில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் துரைசாமி, கிருமாம்பாக்கம் பேட் பஞ்சாயத்து தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் ஏழுமலை, செயலாளர்கள் சேகர், முருகன், முத்துபாலன், சுதர்சனன், கண்ணன், சேரலாதன், அன்பரசன் மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே வாலிபர்களை தாக்கியதை தட்டிக்கேட்ட எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது32). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரான மதிவானன் என்பவரும் இயற்கை உபாதைக்காக அங்குள்ள மூகாம்பிகை நகர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராமு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுடன் சேர்ந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த அய்யப்பன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் வழிமறித்து தாக்கினர்.
இதனை கண்ட செல்வமும், மதிவாணனும் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வம் மற்றும் மதிவாணனை கையாலும், மட்டையாளும் தாக்கினர்.
அதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை குத்தினர். மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
- அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவையில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களை முககவசம் அணிந்து அனுப்பும்படி தகவல் தெரிவித்திருந்தனர். அரசு பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் முககவசம் அணிந்து வரும்படி ஒட்டப்பட்டிருந்தது.
இதனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர்.
- கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணம்பாறு படகு குழாம்களை கட்டியிருந்தது.
- சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வெளிமாநில பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் படகு குழாமுக்கு சென்று படகு சவாரி செய்தனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் களை கட்டியிருந்தது. இதனால் புதுவை அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.
நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.22 லட்சம் வசூலானது. நேற்று முன்தினம் ரூ.9.04 லட்சமும், கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 9.70 லட்சமும் வருவாய் கிடைத்தது. 23-ந்தேதி ரூ.4.29 லட்சமும், 24-ந்தேதி ரூ.8.69 லட்சமும், 25-ந்தேதி ரூ.10.97 லட்சமும், 26-ந்தேதி ரூ. 7.96 லட்சமும், 27-ந் தேதி ரூ.9.66 லட்சமும், 28-ந்தேதி ரூ.8.61 லட்சமும், 29-ந் தேதி ரூ.9.96 லட்சமும் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.75 லட்சம் வசூலானது.
இந்த பணத்தை கொண்டு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 மாத சம்பளமும், 8 மாத ஜி.எஸ்.டி. வரி பாக்கியும் சுற்றுலா வளர்ச்சி கழகம் செலுத்தியுள்ளது.
சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினமும், நேற்றும் சுமார் 2½ லட்சம் பேர் புதுவைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் படகு குழாமில் உள்ள கழிப்பறைகள் மேம்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்தினர் பெரு நிறுவன பங்களிப்பு திட்டத்தின் கீழ் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன.
- தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டை கொண்டாட கிறிஸ்துமஸ் முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் புதுவை நகரமே ஸ்தம்பித்தது.
புதுவையில் சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. ரூ.500 கட்டணம் வசூலித்த விடுதிகள்கூட ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தன. புதுவைக்கு காரில் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் ஆங்காங்கே சாலையிலேயே காரில் படுத்து தூங்கினர்.
பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து புத்தாண்டை கொண்டாட குடும்பத்தோடு வந்திருந்தனர். நள்ளிரவில் கடற்கரையில் கூடிய கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் சூழல் ஏற்பட்டது. கடற்கரையில் கூடிய மக்கள் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறியதால் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.
மது போதையாலும் இளைஞர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால்பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டது. நகர பகுதியில் மட்டும் 28 விபத்துகளில் 31 பேர் காயமடைந்தனர். 10 பேர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 21 பேர் லேசான காயத்துடன் வீடு திரும்பினர்.
கதிர்காமம், மேட்டுப்பாளையம், கோரிமேட்டில் 8 விபத்துகளில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். வில்லியனூர் சுற்று வட்டார பகுதியில் 4 விபத்துகள், கிருமாம்பாக்கத்தில் 4 விபத்துகளில் 8 பேர் காயடைந்தனர். மொத்தம் 44 விபத்துகளில் 47 பேர் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்தது. நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு பயணிகள் அதிகளவில் காத்திருந்தனர்.
சென்னை பஸ்களில் முண்டியடித்து ஏறி இடம் பிடித்து சென்றனர். புதுவைக்கு காரில் வந்தவர்களும் புறப்பட்டதால் மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. புதுவை மாநில எல்லைகள் நேற்று மாலை முதல் இரவு வரை நெரிசலாக இருந்தது.
புத்தாண்டு தினமான நேற்று புதுவை நேணாங்குப்பத்தில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
தாவரவியல் பூங்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 500பேர் சிறுவர் ரெயிலில் பயணித்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி நேற்று மதியம் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உணவருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை 4 மணி வரை மதிய உணவுக்காக காத்திருந்து சாப்பிட்ட பின் சுற்றுலா பயணிகள் புதுவையிலிருந்து கிளம்பிச் சென்றனர்.
புதுவைக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கிளம்பிச்சென்றதால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவு பெற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது.
- நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
- மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பஞ்சவடியில் வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி அமைந்துள்ள இந்த கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், தீபாரா தனை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடைபெற்றது.
வெங்கடாஜலபதி கோவில் முழுவதும் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழத்தோட்டம் போன்ற அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது. தொடர்ந்து 5 மணிக்கு சொர்க்கவாசல் நடைதிறப்பு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் (சொர்க்கவாசல் வழியாக) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 7 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
- இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.
- புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.
புதுச்சேரி:
இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.
இதில் தேர்தேடுக்கப்பட்ட புதுவை நடன மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட னர். இப்போட்டியில் பிரிஸ்டைல் மற்றும் சால்சா பிரிவில் தனிஷ், கார்த்திகா, எரின் ரிச்சல் ஆகியோர் தங்க பதக்கமும், சோனாக்ஷி வெள்ளிபதக்கமும், லிசி, துர்கா, தேவி, பாவித்ரா, காயத்ரி வெண்கலபதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
இவர்கள் அனைவரும் புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.
இதில் பயிற்சியாளர்கள் செந்தில், கொவிந், ஜான்சன், சங்க நிர்வாகிகள் செல்வம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை பொருளாளர் சிலம்பரசன் செய்திருந்தார்.
- புதுவை அடுத்துள்ள வில்லியனூரியில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ளது.
- மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை ரோடுகளில் சுற்றி திரிய விடாமல் கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்துள்ள வில்லியனூரியில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ளது. வில்லியனூர் பகுதிக்கு தமிழக மற்றும் புதுவை பகுதியில் இருந்து ஏராளமான பஸ், லாரி, மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் அதனை கட்டி வைத்து வளர்க்காமல் ரோடுகளில் திரிய விடுகிறார்கள்.
இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை ரோடுகளில் சுற்றி திரிய விடாமல் கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
- பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
உள்ளாட்சித்துறையில் உழவர்கரை நகராட்சியின் கண்காணிப்புப் பொறி யாளர் பக்கிரிசாமியின் பணிநிறைவு பாராட்டு விழா தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மோதிலால்நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1985-ம் ஆண்டுக் கட்டிடவியல் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் கெஜலட்சுமி , விக்டோரியா, சரசு, பிரமகுமாரி, சித்ரா முன்னிலை வகித்தனர்.
பொறியாளர்கள் கண்ணன் , சின்ன கண்ணன், அருளரசன் , மகேஷ் , பாலாஜி,வைத்தியநாதன், ரவிச்சந்திரன், துள சிங்கம்,உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். என்ஜினீயர் சிதம்பரநாதன் சிறப்புரை வழங்கினார். என்ஜினீயர் தேவதாசு நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் 1985-ம் ஆண்டு கட்டிடவியல் மாணவர்கள் ராம்மூர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், சிவகுரு, குமாரராஜா, ரமேஷ், துரை, கலைவாணி கீதா, சுசிலா, மாலா, வள்ளியம்மை, அமுதா, இளநிலைக்கணக்கு அதிகாரி சாய்நாதன், சமூக செயற்பாட்டாளர் சக்திவேல், வக்கீல் லோக கணேஷ், என்ஜினீயர் ஞான சேகரன் உட்பட கலந்துகொண்டனர்.
முடிவில் பணிநிறைவுபெறும் பக்கிரிசாமி ஏற்புரை வழங்கினார். என்ஜினீயர் மாலைமணி நன்றி கூறினார்.
- கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
- படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறக்கும் உற்சாகத்தில் நள்ளிரவில் மது போதையில் இளைஞர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளில் நகர சாலைகளில் வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இந்த நிலையில் கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அந்த வகையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 8 பேரும் சிகிச்சை பெற்றனர். இதை தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பலர் சிகிச்சை பெற்றனர்.
புதுவையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தி, ஒலி பெருக்கி அமைத்து, போக்குவரத்து போலீசார் இருந்த இடத்தில் இருந்த படியே அனைத்து சந்திப்புகளையும் கண்காணிக்க முடியும்.
சிறிய மாநிலமான புதுவையில் இவற்றுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏனோ அவை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.






