என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சுண்ணாம்பாறு படகு குழாமில் ஒரே நாளில் ரூ.22 லட்சம் வசூல்
    X

    புதுவை சுண்ணாம்பாறு படகு குழாமில் ஒரே நாளில் ரூ.22 லட்சம் வசூல்

    • கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணம்பாறு படகு குழாம்களை கட்டியிருந்தது.
    • சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வெளிமாநில பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் படகு குழாமுக்கு சென்று படகு சவாரி செய்தனர்.

    இதனால் கடந்த 10 நாட்களாக புதுவை சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் களை கட்டியிருந்தது. இதனால் புதுவை அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.22 லட்சம் வசூலானது. நேற்று முன்தினம் ரூ.9.04 லட்சமும், கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 9.70 லட்சமும் வருவாய் கிடைத்தது. 23-ந்தேதி ரூ.4.29 லட்சமும், 24-ந்தேதி ரூ.8.69 லட்சமும், 25-ந்தேதி ரூ.10.97 லட்சமும், 26-ந்தேதி ரூ. 7.96 லட்சமும், 27-ந் தேதி ரூ.9.66 லட்சமும், 28-ந்தேதி ரூ.8.61 லட்சமும், 29-ந் தேதி ரூ.9.96 லட்சமும் வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.75 லட்சம் வசூலானது.

    இந்த பணத்தை கொண்டு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 மாத சம்பளமும், 8 மாத ஜி.எஸ்.டி. வரி பாக்கியும் சுற்றுலா வளர்ச்சி கழகம் செலுத்தியுள்ளது.

    சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் சரா சரியாக 4 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினமும், நேற்றும் சுமார் 2½ லட்சம் பேர் புதுவைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

    மேலும் படகு குழாமில் உள்ள கழிப்பறைகள் மேம்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்தினர் பெரு நிறுவன பங்களிப்பு திட்டத்தின் கீழ் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×