என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
    • காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஆன்மீக பூமியாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான ஆன்மீக தலங்கள் உள்ளது.

    மேலும் புதுவையில் 4 பிராந்தியங்களும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

    புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். புதுவை மாநிலம் காரைக்காலில் அழகிய கடற்கரை உள்ளது.

    காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு மத்திய துறைமுக துறை மந்திரியாக இருந்த மன்சுக் மாண்டவியா புதுவைக்கு வந்தார். அவர் காரைக்கால்-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. காரைக்கால் துறைமுகம் 600 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இங்கு படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக துறைமுகங்களின் கூடுதல் செயலர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துறைமுக கட்டுமானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அவர் ஒருசில வாரத்தில் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகம் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்தில் சென்று விடலாம். காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு படகில் செல்ல ஒரு முறைக்கு ரூ.4200 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

    வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
    • ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.

    ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.
    • இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் சாலை பணியை சபாநாயகர் ஏம்பலம்அ செல்வம் தொடங்கி வைத்தார்.

     பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி அபிஷேக பாக்கம் கிராமத்தில் தெப்பக்குளம் விதி, வீரன் கோவில் வீதி, பழைய டி.என். பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளை ரூ.1.44 கோடி மதிப்பில் தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் கள் நாகராஜ், சரஸ்வதி, ரகுராமன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்களான பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், மாயகிருஷ்ணன் ஹேமமாலினி, மாறன், முருகன், ஜானகிராமன், கதிரேசன், ராமகிருஷ்ணன், உமா, தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
    • அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்கும் முறை நடைமுறையில் இல்லை.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில் கட்சியினர் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமாரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மத்திய அரசு நேரடி பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதனால் பல ஆண்டாக பொது விநியோக திட்டம் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்கும் முறை நடைமுறையில் இல்லை. பொதுவிநியோக திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை, ரவை, சர்க்கரை, பாமாயில் உட்பட உணவுப்பொருட்கள் வழங்கினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைவர்.

    மத்திய உணவுத்துறை 30 சதவீத மானியத்தில் உணவுப்பொருட்களை வழங்கலாம். மத்திய அரசு இந்த ஆண்டு முழுவதும் பொது விநியோக திட்டத்தில் உணவுப்பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு இதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே அறிவித்ததுபேல ரேஷன்கடைகளை திறந்து உணவுப்பொருட்களை வழங்கலாம்.

    ரேஷன்கடை கூட்டுறவு சங்கத்தினரை அழைத்து பேசி மத்திய அரசின் பிரதம மந்திரி அன்னயோஜனா திட்டத்தை இணைத்து புதுவையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது மாநில துணை செயலாளர் சேது செல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநில பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.

    • திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.
    • நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.

    சித்தலம்பட்டு கடைவீதி மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதியான தி.புதுக்குப்பம் பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தி.புதுக்குப்பம் பகுதியில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் இருந்தது.

    சாலை விரிவாக்கப் பணிக்காக அகலப்படுத்தும் போது அந்த ஆலமரத்தினை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    அந்த மரத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியாக தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், புதுவை தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் 3 நாட்கள் போராடி வேருடன் அந்த ஆலமரம் பிடுங்கப்பட்டது.

    பிடுங்கப்பட்ட ஆலமரம் மீண்டும் அங்குள்ள பொம்மி ரெட்டி குளம் குளக்கரையில் கிராம மக்களின் முயற்சியினாலும், சமூக ஆர்வலர்களின் முயற்சியாலும் நடப்பட்டது.

    வெட்டி அகற்றப்பட்ட மரம் மீண்டும் குளக்கரையில் நடப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    100 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தினை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சி அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

    • புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
    • 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு தூங்க சென்றனர். அதிகாலை 2.10 மணிக்கு திடீரென சத்தம் கேட்டுள்ளது.

    உடனே குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தம் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, சப்- இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசாரால் உடனடியாக எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

    ஏதாவது ஒரு வாகனத்தில் தீப்பொறி பட்டு மற்ற வாகனங்கள் எரிந்திருக்கலாம். அல்லது யாராவது வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி ன்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனங்கள் எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு 6 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தும். அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.
    • சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது.

    இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. புதுவையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவையில் கடந்த நவம்பர் 27-ந் தேதி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் பொது இடங்களில் முக கவசம் அணிய புதுவை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என கொரோனா பாதிப்பு இருந்தது.

    நேற்று 680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுவையில் 2, காரைக்காலில் 2,ஏனாமில் ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வீடுகளில் 20 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உருமாறிய கொரோனா பாதிப்பு புதுவையில் இல்லை. போதிய தடுப்பூசி உள்ளதால் விடுப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை நயினார்மண்ட பம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
    • அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நயினார்மண்ட பம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் பாலாஜி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ், அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 2மாதத்துக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அலெக்சை பாலாஜியும் அவரது நண்பரும் சேர்ந்து தாக்கினர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் அலெக்ஸ் அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகள் பாலாஜியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து பாலாஜியின் தந்தை ராஜேந்திரனிடம் உனது மகன் எங்கே? என்று கேட்டனர். அதற்கு ராஜேந்திரன் தனது மகன் திருவண்ணாமலைக்கு பாதயாத்திரையாக சென்றிருப்பதாக தெரிவித்தார்.

    அப்போது அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி விட்டு சென்றனர். நேற்று காலை பாலாஜி வீட்டுக்கு வந்ததும் அவரது தந்தை நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

    இதையடுத்து ஆவேச மடைந்த பாலாஜி தந்தையை மிரட்டி விட்டு சென்றவர்களை தட்டிக்கேட்க முடிவு செய்தார். அதற்கு அவரது தந்தை ராஜேந்திரன் மறுத்தும் அதனை ஏற்காமல் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அலெக்சின் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்த அலெக்ஸ், அவரது தம்பி முத்து மற்றும் இவர்களது கூட்டாளிகளான செந்தில், சவுந்தர் ஆகியோரிடம் பாலாஜி தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பாலாஜியை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியது. இதனால் வலி தாங்காமல் பாலாஜி அந்த கும்பலிடமிருந்து தப்பித்து ஓடினார்.

    ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி பாலாஜியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் பாலாஜி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது தந்தை ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை தாக்கி கத்தியால் குத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

    • புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது.
    • விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது. விழாவிற்க்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரிமளம்.பத்மநாபன், தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு,துணைத் தலைவர்ஆதிகேசவன், பொருளாளர் திருநாவு க்கரசு, துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், துணை ச்செயலர் அருள்செல்வம் மற்றும் விருதாளர்கள் தந்தை பிரியன், சம்பத், ராஜா கண்ணு, சுமித்ரா, பிரபா, சரவணன் மற்றும் கவிஞர்கள்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படு த்துகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படு த்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    வேர்க்கடலை, சிறுதானியம் பயிர் செய்த பொதுப்பிரிவு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.6 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிறு வகைகளுக்கு பொதுப்பிரிவு ரூ.2 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.3 ஆயிரம், பருத்தி பொதுபிரிவுக்கு ரூ.10 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.11 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த நிதியாண்டில் பயிர் செய்த விவசாயிகள் விண்ணப்பங்களை உழவர் உதவியகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக் கீரப்பா ளையம், நேதாஜிநகர், உடையார் தோட்டம், பெரிய பள்ளி, வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் சமூக விரோதிகள் சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனர். ஆகையால் அப் பகுதியில் மின் விளக்குகள் அமைத்து அதற்கான சுவிட்சை அங்காளம்மன் கோவில் தெருவில் வைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. மின் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று நகர செயற்பொறியாளர் கனிய முதனிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து உடனடியாக நடவடி க்கைகள் மேற்கொண்டு மின் விளக்குகளை சீரமை ப்பதாக செயற்பொறி யாளர் உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவரணி விநாயகம், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×