search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால்-இலங்கைக்கு படகு சேவை விரைவில் தொடங்குகிறது
    X

    காரைக்கால்-இலங்கைக்கு படகு சேவை விரைவில் தொடங்குகிறது

    • புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
    • காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஆன்மீக பூமியாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான ஆன்மீக தலங்கள் உள்ளது.

    மேலும் புதுவையில் 4 பிராந்தியங்களும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

    புதுவைக்கு தினத்தோறும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். புதுவை மாநிலம் காரைக்காலில் அழகிய கடற்கரை உள்ளது.

    காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு மத்திய துறைமுக துறை மந்திரியாக இருந்த மன்சுக் மாண்டவியா புதுவைக்கு வந்தார். அவர் காரைக்கால்-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. காரைக்கால் துறைமுகம் 600 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இங்கு படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக துறைமுகங்களின் கூடுதல் செயலர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துறைமுக கட்டுமானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அவர் ஒருசில வாரத்தில் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகம் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்தில் சென்று விடலாம். காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு படகில் செல்ல ஒரு முறைக்கு ரூ.4200 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×