என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அருகே நீச்சல் குளத்தில் விழுந்து 6 வயது குழந்தை பலி
    X

    புதுவை அருகே நீச்சல் குளத்தில் விழுந்து 6 வயது குழந்தை பலி

    • பெண் குழந்தை சஹானா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தது.
    • பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது குடும்பம் உள்ளிட்ட இவரது நண்பர்கள் குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாடுவதற்காக புதுவை அருகே பூத்துறையில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு நேற்று வந்தனர். அங்கு தங்கியவர்கள் சந்தோஷமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு பரந்தாமனின் 6 வயது பெண் குழந்தை சஹானா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தது. எதிர்பாராமல் நீச்சல் குளத்தில் விழுந்த சஹானாவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குழந்தையை மீட்டு உடனடியாக வாகனம் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த ரிசார்ட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுவை வந்த குடும்பத்தினர் குழந்தையை இழந்த சம்பவம் அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×