என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ, அஸ்வினி, அருண்மொழி, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். திறனாய்வுத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்து இருந்தார்.

    • உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையம் ஒரு வாரமாக செயல்படாமல் இருந்தது.
    • உப்பளம் தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையம் ஒரு வாரமாக செயல்படாமல் இருந்தது.

    அதனை அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குடிநீர் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்கிந்த ஊழியர்கள், மையத்தில் இருந்த மோட்டார்களை அதிகாரிகள் எடுத்து சென்று விட்டதாக கூறினர்.

    அதனைத் தொடர்ந்து செயற்பொறியாளர் முருகா னந்தம், உதவிப்பொ றியாளர் வாசன் ஆகியோர் தலைமையிலான ஊழி யர்கள் மோட்டரை உடனடியாக சரி செய்து பொறுத்தி உப்பளம் தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

    இதில் தி.மு.க. அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, கிளை செயலாளர் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், சந்தோஷ், அருண்பாண்டியன், ராம்குமார், மணிகண்டன், சித்தார்த்தன், ரகுமான், ஜெரோம் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
    • சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

    இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.

    அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.

    சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

    இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    • கலை நிகழ்ச்சியை புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
    • கலை நிகழ்ச்சியில் பல்வேறு நடன குழுவினர் ஆதிவாசிகளின் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்றவை நடந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் பல்வேறு கலைக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலையோர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை மாநிலம் காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் காரைக்கால் கார்னிவல் திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் விழா நடைபெறுகிறது.

    நேற்று முதல் நாளில் சாலையோர கலை நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சியை புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜீம் ஆகியோர் குதிரை வண்டியில் நகரை ஊர்வலமாக வந்தனர்.

    கலை நிகழ்ச்சியில் பல்வேறு நடன குழுவினர் ஆதிவாசிகளின் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்றவை நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் முகமது மன்சூர், துறை கலெக்டர் ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகஸ்வரன், மற்றும் பலர் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
    • அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    உதவித் தொகை

    புதுவையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இம்மாதம் முதல் புதிதாக 16 ஆயிரத்து 769 பேர் உதவித்தொகை பெற உள்ளனர். சட்டசபையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.

    அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும். எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.

    மாற்றுத்திறனா ளிகளுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல துறைகளில் முதலிடத்தை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழர்களிடையே நட்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன.
    • பொதுவாக சிறுவர்கள் மட்டும் விளையாடும் கிட்டிப்புல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ம் ஆண்டு வரை நாட்டுப்புற விளையாடப்பட்டதாக இருந்தது.

    புதுச்சேரி:

    தமிழர்களிடையே நட்பு மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன.

    நொண்டி அடித்தல், பரமபதம், கில்லி - தாண்டு, கோலி குண்டு, பம்பரம், பச்சை குதிரை ஏறுதல், கண்ணாமூச்சி, தாயம் போன்ற விளையாட்டுகள் மறந்து, செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளாக மாறிவிட்டன. கில்லி எனப்படும் கிட்டிப்புல் தமிழர்களின் பழமையான விளையாட்டு.

    பொதுவாக சிறுவர்கள் மட்டும் விளையாடும் கிட்டிப்புல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ம் ஆண்டு வரை நாட்டுப்புற விளையாடப்பட்டதாக இருந்தது.

    உடல் ஆரோக்கியம், உற்சாகம் மட்டுமின்றி குழு மனப்பான்மை, ஒற்றுமை உணர்வு, நட்பை பலப்படுத்துதல், துரித முடிவெடுக்கும் திறன் போன்ற அம்சங்களை இந்த விளையாட்டு உள்ளடக்கியிருந்தது.

    தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் புதுவையை சேர்ந்த கில்லி பாய்ஸ் குழு இறங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை தேங்காய்திட்டு ஆச்சார்யா பள்ளி எதிரே கிட்டிபுல் போட்டியை இக்குழு நடத்தியது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிட்டி புல் குழுவினர் பங்கேற்றனர்.

    அமைச்சர் தேனீஜெயக்குமார் போட்டிகளை தொடங்கிவைத்தார்.

    விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பா.ஜனதா பிரமுகர்கள் சாம்ராஜ், காமராஜ், கில்லி பாய்ஸ் குழு தலைவர் பாரதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாண்டிமெரினா மக்கள் மேடையில் பரிசளிப்பு இன்று  நடக்கிறது.

    போட்டிக்கான உதவிகளை சின்னதம்பி, சரவணன், முனியன், மகேஷ், கோவிந்தராஜ், சுரேஷ் உட்பட பலர் செய்திருந்தனர்.

    • பாகூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகளில் வளர்க்கும் கறவை மாடுகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் காளை மாடுகளை தென்பெண்ணை ஆறு ஏரி குளங்களில் கழுவி வருகின்றனர்.
    • இதே போல நடைபெறும். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு விவசாயத்தி ற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களையும் அலங்கரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகளில் வளர்க்கும் கறவை மாடுகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் காளை மாடுகளை தென்பெண்ணை ஆறு ஏரி குளங்களில் கழுவி வருகின்றனர்.

    பின்னர் மாட்டின் கொம்பில் வண்ணம் பூசி, மலர், மா, பனை ஓலையால் தோர அலங்காரம் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல நடைபெறும். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு விவசாயத்தி ற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களையும் அலங்கரித்து வருகின்றனர்.

    அனைத்து கிராமத்திலும் மாடுகளை கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்து மஞ்சுவிரட்டு விமர்சையாக நடத்துவர் அதே போல இளைஞர்கள் தங்களது வாகனங்களில் ஏறிக்கொண்டு ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வருவர்.

    • தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு கோலப்போட்டி மற்றும் உறியடி நடைபெற்றது.
    • ஆண் பெண் ஊழியர்கள் பங்கேற்ற உறியடியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 8 பேர் உறியடித்து பானையை உடைத்தனர்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு கோலப்போட்டி மற்றும் உறியடி நடைபெற்றது.

    இதில் ஆர்வமுடன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.கோலப்போட்டியில் 5 பேர் கொண்ட குழுவாக 50-க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கோலங்கள் போட்டு பாரம்பரிய உடையுடன் மண்பானையில் பொங்கல் இட்டனர்.

    ஆண் பெண் ஊழியர்கள் பங்கேற்ற உறியடியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 8 பேர் உறியடித்து பானையை உடைத்தனர். முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, ஜோபி ஜார்ஜ் ஆகியோர் முதல் பரிசு 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 3 ஆயிரம் வழங்கினர். உறியடியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 1000 வழங்கப்பட்டது.

    முடிவில் அனைத்து கல்லூரி ஊழியர்களுக்கும் கரும்பு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவ கல்லூரி பூண்டிருந்தது.

    • துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது.
    • வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் செயல்படும் ஒலாந்திரியா தொண்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

    துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களை ஒலாந்திரியா இயக்குனர் செந்தில்குமரன், துணை இயக்குனர் சாந்தி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். சுற்றுலா பெண் பயணிகளில் சிலர் சேலை அணிந்திருந்தனர். வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியபோது பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.

    பின்னர், மாட்டு வண்டியில் ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்தனர். உள்ளூர் கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    • மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி மற்றும் துணை நர்சிங் மருத்துவ பிரிவில் படிக்கும் மாணவர்களுக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் உருவாக்கப்பட்ட உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி மற்றும் துணை நர்சிங் மருத்துவ பிரிவில் படிக்கும் மாணவர்களுக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் உருவாக்கப்பட்ட உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சுமதி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பெனட் ராஜ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மேரி புனிதா பெனட் ராஜ் ஆகிேயார் கலந்து கொண்டனர்.

    மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மானேஜ்மண்டின் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் மயிலம் கல்வி குழுமத்தின் அனைத்து துறை தலைவர்களும் , பேராசிரிகளுகம், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    முடிவில் மயிலம் நர்சிங் கல்லூரி துணை பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

    • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் சமூக நலத்துறை மூலம் உடல் ஊனம், மனநிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை வழங்கினார்.
    • இதில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் சமூக நலத்துறை மூலம் உடல் ஊனம், மனநிலை பாதிப்பு,காது கேளாதோர், கண் தெரியாத பயனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை ஏற்ப மாதாந்திர உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்து அதற்கான அரசு ஆணையை 11 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×