என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் மையம் சீரமைப்பு-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
    X

    உப்பளம் தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஏற்பாடுகளை கென்னடி எம்.எல்.ஏ. செய்த காட்சி.

    குடிநீர் மையம் சீரமைப்பு-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

    • உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையம் ஒரு வாரமாக செயல்படாமல் இருந்தது.
    • உப்பளம் தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையம் ஒரு வாரமாக செயல்படாமல் இருந்தது.

    அதனை அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குடிநீர் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்கிந்த ஊழியர்கள், மையத்தில் இருந்த மோட்டார்களை அதிகாரிகள் எடுத்து சென்று விட்டதாக கூறினர்.

    அதனைத் தொடர்ந்து செயற்பொறியாளர் முருகா னந்தம், உதவிப்பொ றியாளர் வாசன் ஆகியோர் தலைமையிலான ஊழி யர்கள் மோட்டரை உடனடியாக சரி செய்து பொறுத்தி உப்பளம் தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

    இதில் தி.மு.க. அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, கிளை செயலாளர் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், சந்தோஷ், அருண்பாண்டியன், ராம்குமார், மணிகண்டன், சித்தார்த்தன், ரகுமான், ஜெரோம் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×