என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியில் அப்பகுதி மகளிர் மட்டும் குழந்தைகள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜிரியோ கராத்தே சங்க மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் சேவை இயக்கம் இளைஞரணி தலைவர் விநாயகம், ரெனோ, ஓம்சக்தி ரமேஷ், சந்திரசேகர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.

    விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஐஸ்வர்யா மற்றும் புஷ்பா செய்திருந்தனர்.

    • புதுவை அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    • கொலை சம்பவம் காரணமாக அரங்கனூர் மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    பாகூர்:

    புதுவை அருகே அரங்கனூரை அடுத்த தமிழக பகுதியான கீழ்குமார மங்கலம் காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தமிழரசன்(வயது32). இவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தமிழரசன் வீட்டில் இருந்தார். அப்போது 3 பேர் தமிழரசனை மோட்டார் சைக்கிளில் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர். அதன்பிறகு வெகு நேரமாகியும் தமிழரசன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் தமிழரசனின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவரது செல்போனை வேறு நபர் எடுத்து பேசினார். தமிழரசன் அதிக குடிபோதையில் இருப்பதாகவும், போதை தெளிந்த பின்னர் வீட்டுக்கு வருவார் என்று தெரிவித்தார்.

    ஆனால் அதன்பிறகும் பல நேரம் கழித்தும் தமிழரசன் வீடு திரும்பதால் மீண்டும் அவரது செல்போனில் பெற்றோர் தொடர்பு கொண்டனர்.

    அப்போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சென்று தமிழரசனை தேடினர். ஆனால் தமிழரசன் எங்கும் இல்லாததால் வீடு திரும்பினர்.

    இந்தநிலையில் புதுவை பகுதியான அரங்கனூர் சுடுகாட்டு பகுதியில் இன்று காலை தமிழரசன் முகத்தில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற விவசாயிகள் இதனை பார்த்து தமிழரசனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்ட னர். அவர்கள் தமிழரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மேலும் தகவல் அறிந்த புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தமிழரசனை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்தும், முகத்தில் சரமாரியாக தாக்கியும் கொடூரமாக கொலை செய்திருப்பதை கண்டனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கீழ்குமாரமங்கலம் பகுதியில் 2 பிரிவினர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது.

    இந்த மோதலில் தமிழரசனும் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கும் அவர் மீது உள்ளது. எனவே இந்த மோதல் எதிரொலியாக தமிழரசனை எதிர் கோஷ்டியினர் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழரசனை அழைத்து சென்ற நபர்கள் யார்? அவர்கள் மூலம் தமிழரசனை எதிர் கோஷ்டினர் கழுத்தை நெரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் காரணமாக அரங்கனூர் மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு பாகூர் போலீசாரும், ரெட்டிச்சாவடி போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குடிபோதையில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காணும் பொங்கலை யொட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்க ளுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்பவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • விசார ணையில் அவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    குடிபோதையில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காணும் பொங்கலை யொட்டி பல்வேறு இடங்களில் பொதுமக்க ளுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்பவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதுபோல் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியில் பொது இடத்தில் மது அருந்தி விட்டு ரகளை செய்த வாலிபரை வில்லியனூர் போலீசார் மடக்கி பிடித்தனர். விசார ணையில் அவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் மடுகரை-ராம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரு ஓட்டல் அருகே சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் குடிபோதையில் ரகளை செய்த பண்ருட்டி மாளிகை மேடு பகுதியை சேர்ந்த தேவா(27) என்பவரை மடுக்கரை போலீசாரும், மதகடிபட்டு சந்தை தோப்பு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த இருதய ஆனந்ததாசன் என்பவரை திருபுவனை போலீசாரும், மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை ரோடு பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த சோழன் என்பவரை திருக்கனூர் போலீசாரும், நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனி அருகே குடிபோதையில் ரகளை செய்த கல்மண்பத்தை சேர்ந்த அருண்(30), சிவராந்தகத்தை சேர்ந்த சிவகுரு(20) ஆகிய 2பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    • மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. வில்லியனூர் அருகே மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் புகழேந்தி (வயது22).
    • அதனை தொடர்ந்து பருதி அவருடைய நண்பர் ராம் என்பவரையும் அழைத்து வந்தார். பின்னர் 4 பேரும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் புகழேந்தி (வயது22). இவர் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜய் என்பவர் புகழேந்தியை வெளியே அழைத்து சென்றார்.

    பின்னர் இருவரும் அங்குள்ள வயலில் அமர்ந்து மது குடித்து கொண்டி ருந்தனர். அப்போது விஜய் அவருடைய நண்பரான பருதியை செல்போனில் பேசி மது அருந்த அழைத்தார். அதனை தொடர்ந்து பருதி அவருடைய நண்பர் ராம் என்பவரையும் அழைத்து வந்தார். பின்னர் 4 பேரும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென புகழேந்திக்கும், பருதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பருதி பீர் பாட்டிலால் புகழேந்தியின் தலையில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த புகழேந்தியை விஜய் மற்றும் ராம் ஆகிய இருவரும் மீட்டு அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் இதுகுறித்து புகழேந்தி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.
    • தொடர்ந்து தேங்காய் திட்டு, இந்திரா நகர், வீராம்பட்டினம், ஆர். கே. நகர், சுப்பையா நகர், மாஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.

    அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் மரியாதை செலுத்தி 500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.

    தொடர்ந்து தேங்காய் திட்டு, இந்திரா நகர், வீராம்பட்டினம், ஆர். கே. நகர், சுப்பையா நகர், மாஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
    • நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.

    புதுச்சேரி:

    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.

    ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில் நடந்தது. ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். விடுதலை போராட்ட காலத்தில் புதுவை ஒரு தாயின் மடியைபோல பலரை அரவணைத்து, அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புகலிடமாக இருந்தது.

    ஆரோவில் நகரத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் சரிசெய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், கவர்னரின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

    தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.

    அவ்வளவு எளிதாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.

    தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் அதை முதலமைச்சருடன் சேர்ந்து வழங்க உள்ளோம்.

    மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆரோவில் மாணவிகள் கவர்னர் தமிழிசைக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களைப்போல பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • அடுத்தகட்டமாக 2-வது கட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலை புதுவை நகர அமைப்பு குழுமம் தயாரித்து வருகிறது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்கள் உள்ளன.

    இந்த கட்டிடங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக பாரம்பரிய கட்டிங்கள் எவை? என அடையாளம் காணப்பட்டு அவை பட்டியலிடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு கட்டிடங்கள் 36, பிரெஞ்சு அரசு கட்டிடங்கள் 9, அரவிந்தர் ஆசிரம கட்டிடங்கள் 60, தேவாலயங்கள் 9 என மொத்தம் 114 கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் தர கட்டிடங்களில் ஆயி மண்டபம், பழைய துறைமுகம், கோபுரம், கவர்னர் மாளிகை, டூப்ளக்ஸ் சிலை, பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர் ஆசிரமம், துமாஸ் தேவலாயம், குபேர் மார்க்கெட் கடிகார கோபுரம் ஆகியவை அடங்கியுள்ளன.

    புதுவை நகர அமைப்பு குழுமம் இந்த பட்டியலை வெளியிட்டு இதில் பொதுமக்களுக்கு ஆட்சேபனைகள், பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்கும்படி கோரிய பின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இனி இந்த கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதியில்லை. சிறிய சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    இதன் மூலம் அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களைப்போல பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக 2வது கட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலை புதுவை நகர அமைப்பு குழுமம் தயாரித்து வருகிறது. அரசின் ஒப்புதல் பெற்றவுடன் இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீய சக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க. துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தமிழன், துணை பொது செயலாளர் ரங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீய சக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு வருடம் ஆகின்ற நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓர் அணி திரள வேண்டும்.

    வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியின் சின்னம் இருப்பதால் அ.தி.மு.க உண்மையாகி விடாது. ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற உண்மையான இயக்கம் அ.ம.மு.க. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜனநாயக அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வேலியே பயிரை மேய்வது போல் செயல்படும் கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு விவகாரத்தில் கவர்னர் அரசியல் செய்கிறார்.

    மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு அமைதி பூங்காவன தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் கவர்னரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சேதராப்பட்டில் ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • பஸ் கண்டக்டரிடம் ஜக்காம்பேட்டைக்கு சந்தோஷ்பிரபு டிக்கெட் கேட்ட போது கலையரசன் திடீரென ஜக்காம்பேட்டைக்கா செல்கிறாய் என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்பிரபுவின் மார்பில் குத்தினார்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டில் ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பிரபு(வயது40). இவர் கரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து ஒரு தனியார் பஸ் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். அதே பஸ்சில் கழுதாளி கிராமத்தை சேர்ந்த கலையரசன் (38) என்பவரும் பயணம் செய்தார்.

    பஸ் கண்டக்டரிடம் ஜக்காம்பேட்டைக்கு சந்தோஷ்பிரபு டிக்கெட் கேட்ட போது கலையரசன் திடீரென ஜக்காம்பேட்டைக்கா செல்கிறாய் என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்பிரபுவின் மார்பில் குத்தினார். இதில் வலி தாங்காமல் சந்தோஷ் பிரபு அலறவே உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி கலையரசன் தப்பியோடி விட்டார். கத்தி குத்தில் காயமடைந்த சந்தோஷ்பிரபு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் கே.எம்.ராமசாமி தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொகுதி பொருளாளர் தட்சிணா மூர்த்தி, வார்டு செயலாளர் ராஜாங்கம், பொறுப்பாளர்கள் ராஜாராமன், ராமமூர்த்தி, ராஜராஜன், கவுரி, தனம், ஜெயகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • முத்தாலம்மன் கோவில் சார்பில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி ‌விமர்சையாக நடந்தது. ஏராளமான வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாடுகளை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கும் விவசாயத்திற்காக பயன்ப டுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களை யும் அலங்கரித்து.

    அனைத்து கிராமத்திலும் மாடுகளை கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்து மஞ்சுவிரட்டு விமர்சையாக நடத்தினர். இதில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என வாகனங்களில் ஏறிக்கொண்டு பொங்க லோ பொங்கல் என ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்தனர்.

    பாகூர் முத்தாலம்மன் கோவில் சார்பில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஏராளமான வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. இதைக்கான வெளியூர் மக்கள் வெளிநாட்டினர் கண்டு களித்தனர்.

    இந்த மஞ்சு விரட்டு ஊர்வலம் சுமார் 5மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், பெண்கள், சிறுவர் பங்கேற்றதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள புனித வனத்த அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்பையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள புனித வனத்த அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்றது.

    பங்குதந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்பையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர்கள் கந்தசாமி, சசிகுமார், அகிலன், இளைஞர் அணி தாமரைக்கண்ணன், வேலு, பில்லா, ஜேம்ஸ், ராஜா, சாலமன், ஹன்றி, சண்முகம், சேட்டு, முரளி, ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×