என் மலர்
புதுச்சேரி

பொதுமக்களுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிரியாணி வழங்கிய காட்சி.
அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு பிரியாணி
- அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.
- தொடர்ந்து தேங்காய் திட்டு, இந்திரா நகர், வீராம்பட்டினம், ஆர். கே. நகர், சுப்பையா நகர், மாஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் மரியாதை செலுத்தி 500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.
தொடர்ந்து தேங்காய் திட்டு, இந்திரா நகர், வீராம்பட்டினம், ஆர். கே. நகர், சுப்பையா நகர், மாஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story