என் மலர்
நீங்கள் தேடியது "MGR's birthday"
- ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் கே.எம்.ராமசாமி தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொகுதி பொருளாளர் தட்சிணா மூர்த்தி, வார்டு செயலாளர் ராஜாங்கம், பொறுப்பாளர்கள் ராஜாராமன், ராமமூர்த்தி, ராஜராஜன், கவுரி, தனம், ஜெயகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






