என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 ஐ முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்து மற்றும் சித்த உணவு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகா டமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகன் ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை அதிகாரின் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவின் உணவியல் துறை மற்றும் புதுவை சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 ஐ முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்து மற்றும் சித்த உணவு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன் துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராய ணசாமி கேசவன், இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் தலைமை தாங்கினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகா டமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகன் ஆராய்ச்சித்துறை டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை அதிகாரின் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய இயக்குனர் மீனா குமாரி சிறப்புரையாற்றினார். ஆராய்ச்சி அதிகாரி ராஜேந்திர குமார் நோக்க உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் சத்திய ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

    கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவியல் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
    • அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

    இந்நிகச்சியில் துறை அதிகாரிகள், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம், சங்கர நாராயணன், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக, நடராஜன் தலைமையில் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் தேவதாஸ், அரசப்பன், அழகர், இலியாஸ், தர்மலிங்கம், சுப்பிரமணி, மூர்த்தி, இளங்கோ, முருகன், ரவி, பரமசிவம், தண்டபாணி, ஜெயபால், பாண்டுரங்கன், தாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தின் 2023-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
    • சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு "கலாம் விருது"வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தின் 2023-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    அப்போது நடந்த ஆண்டு விழா பரிசளிப்பு மற்றும் கலை விழாவில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு 500-க்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

    சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு "கலாம் விருது"வழங்கி கவுரவிக்கப்பட்டது. பேச்சுப்போட்டி, தேச பக்தி பாடல்கள், பரதநாட்டியம், நடனம், இசைக்கருவிகள் வாசித்தல் மற்றும் மாறுவேட போட்டிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் தொண்டமாநத்தம் அறங்காவல் குழு தலைவர் எம்.எம்.சி மனோகரன், கருப்பையா, கேப்டன் பாரதி, ராஜா, சக்தி முருகன், பிரகாசம், கமலக்கண்ணன், புதுவை சுடர் சிவகுமார், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை தொண்டமாநத்தம் கலாம் இளைஞர் இயற்கை பாரத சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- கோட்டக் குப்பம் நகராட்சியில் தற்போது வரை குடிநீர் கட்டணம் செலுத்தாமல் சுமார் ரூ.87 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது.
    • நமது நகராட்சியில் குடிநீர் பராமரிப்புக்கு தொடர் செலவினங்களும் அதிகமாக ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-

    கோட்டக் குப்பம் நகராட்சியில் தற்போது வரை குடிநீர் கட்டணம் செலுத்தாமல் சுமார் ரூ.87 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது.

    மேற்படி நிலுவைத் தொகையினை செலுத்து–மாறு பொதுமக்களுக்கு நகராட்சி வரி வசூல் பணியா ளர்கள் மூலமாக நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும் குடிநீர் கட்டண வசூலில் முன்னேற்றம் ஏதும் இல்லை. குடிநீர் கட்டண நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதால் துறை இயக்குநர் 11.01.2023 நடத்திய ஆய்வு கூட்டத்தில் 31.01.2023-க்குள் நிலுவைத் தொகையினை வசூல் செய்திட வேண்டும் என்றும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவ–லர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் நமது நகராட்சியில் குடிநீர் பராமரிப்புக்கு தொடர் செலவினங்களும் அதிகமாக ஏற்படுகிறது. நிலுவை அதிகமாக உள்ளதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாலும் மேலும் குடிநீர் கட்டணம் முழுமையாக வசூல் செய்தால் சிறப்பாக தடையின்றி குடிநீர் வழங்கலாம் என்பதாலும் அனைத்து வார்டுகளிலும் முதற்கட்டமாக 5000 ரூபாய்க்கு மேல் குடிநீர் கட்டணம் நிலுவைத் தொகை வைத்துள்ளவர்களின் 337 இணைப்புகள் விபரங்கள் கண்டறியப்பட்டு அந்த இணைப்புகளை இன்று முதல் படிப்படியாக துண்டிப்பு செய்திட பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்படி குழுவிற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது.
    • பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத 21 முதல் 55 வயதிற்குட்பட்ட ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இந்த திட்டத்திற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கோப்புக்கு கவர்னர் தமிழிசை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது. பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி கூடுதல் செலவாகும். முதல்கட்டமாக 17 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை வருகிற 23-ந் தேதி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லூரி வளாகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.

    • கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.
    • தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வன உயிரினங்களை காப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதையொட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புலிவேந்தலா பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் வன உயிரினங்களின் தத்ரூபமான சிலைகளை ஆந்திர அரசு அமைக்க உள்ளது.

    இதற்காக புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் இயங்கும் வைல்ட் லைப் ஆர்ட் கேலரி நிறுவனர் பூபேஷ் குப்தாவிடம் ரூ.40 லட்சம் செலவில் சிலை மற்றும் ஓவியங்கள் தயார் செய்து பூங்காவில் அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

    அதையடுத்து, கைவினை கிராமத்தில் பெரோசிமெண்ட், பைபரை கொண்டு புலி, மான், கரடி, குரங்கு, மயில் உள்ளிட்டவை அதன் நிஜ உருவ அமைப்பில் தத்ரூபமாக தயாராகியுள்ளது. மற்றும் செங்குத்தாக நிற்கும் பாறைதூணில் பச்சை கிளி, அணில், பச்சோந்தி, காட்டு முயல், மலை பாம்பு, உடும்பு, காட்டுப்பல்லி, மேலும் கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உலகிலேயே ஆந்திராவில் மட்டுமே தரையில் வாழும் 'ஜடன் கோர்சர்' பறவை சிலை, கடப்பா கல்லில் வரையப்பட்ட பறவைகள் ஓவியம் என 40 உயிரினங்களின் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.

    அதற்கான வன உயிரினங்களை தயார் செய்யும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இதே போன்ற பணிகள் நடந்து வருகிறது.

    • திருபுவனையை அடுத்த கொத்தாபுரி நத்தம் ஏரிக்கரை ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் பழுதான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணி நடந்தது.
    • அப்போது எதிர்பாராத விதமாக ரோலிங் ஷட்டர் மணிகண்டனின் தலையில் விழுந்தது. அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மற்ற தொழிலாளிகள் அரியூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    திருபுவனையை அடுத்த கொத்தாபுரி நத்தம் ஏரிக்கரை ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் பழுதான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணி நடந்தது.

    தமிழக பகுதியான கண்டமங்கலம் அருகே சின்ன பாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது30 ). மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகபாலன், சக்திவேல் ஆகிய 3 பேரும் ஷட்டர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ரோலிங் ஷட்டர் மணிகண்டனின் தலையில் விழுந்தது. அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மற்ற தொழிலாளிகள் அரியூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் திருபு வனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மணிகண்ட னின் மனைவி சரசு மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மணிகண்ட னுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் அவருக்கு தொழிற்சாலை மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதுவை மாநில கபடி சங்க (யூனியன் டெரிட்டரி ஆப் பாண்டிச்சேரி கபடி அசோசியேசன்) பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.
    • இந்த தேர்தலில் புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய தலைவராக விஜயராணி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கபடி சங்க (யூனியன் டெரிட்டரி ஆப் பாண்டிச்சேரி கபடி அசோசியேசன்) பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் 2023- 2027-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக இந்திய அரசின் அமலாக்க இயக்குனரக அரசு சிறப்பு வக்கீல் விநாயகம் முன்னிலையில் தேர்தல் நடந்தது. மேற்பார்வையாளராக புதுவை மாநில விளையாட்டு ஆணையத்தின் அதிகாரி சண்முகம், பாண்டிச்சேரி ஒலிம்பிக் அசோசியேசன் இணை செயலாளர் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த தேர்தலில் புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய தலைவராக விஜயராணி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். கோவி. ஆரியசாமி பொது செயலாளராகவும், கபிலன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக தெய்வசிகாமணி, கதிர வன், சோழசிங்கராயர், செல்வராசு காசிநாதன், செந்தில்குமார் ஆகியோரும் இணை செயலாளராக வீரசெல்வம், ஸ்ரீதர், மயிலப்பன், சக்திவேல், கர்ணன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பதவியேற்பு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு புதுவை மாநில கபடி சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டார். இதில் முன்னாள் கபடி சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கபடி அணியினுடைய நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கபடி சங்க செய்தி தொடர்பாளர் பூபாலன் நன்றி கூறினார்.

    • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.
    • மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர்.

    புதுச்சேரி:

    சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.

    கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூகநலத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது.

    கருத்தரங்கில் புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர். மாதந்தோறும் பயனாளிகள் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.455.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இறந்து விட்டால் ஈமச்சடங்கு நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 200 முதியோருக்கு ரூ.1.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    முதியோர் உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 முதியோர் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு முன் உதவியாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் உதவுகிறது. முதியோர்க ளுக்கு ஆலோசனை, உதவிகளை வழங்க தேசிய உதவி எண் 14567 சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • புதுவை நேரு வீதியில் கடந்த 25 ஆண்டுகளாக ராஜேந்திராஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற சுபமுகூர்த்த திருநாளை முன்னிட்டு மாபெரும் பட்டு சேலை கண்காட்சி நடைபெறுகிறது.
    • இந்த கண்காட்சியில் பட்டு நெசவாளர்களின் நேரடி தள்ளுபடி விற்பனையாக 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் ரூ. 600 முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பட்டுப் புடவைகள் கண் காட்சியில்விற்பனைக்கு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் கடந்த 25 ஆண்டுகளாக ராஜேந்திராஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வருகிற சுபமுகூர்த்த திருநாளை முன்னிட்டு மாபெரும் பட்டு சேலை கண்காட்சி நடைபெறுகிறது.

    இந்த பட்டு சேலை கண்காட்சி ஜனவரி 14 முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியினை கடையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருடமும் எங்களது கடையில் பட்டு சேலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பட்டு சேலை கண்காட்சி எங்களது ஷோரூமில் முதல் தளத்தில் பிரத்தியேகமாக நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் பட்டு நெசவாளர்களின் நேரடி தள்ளுபடி விற்பனையாக 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் ரூ. 600 முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பட்டுப் புடவைகள் கண் காட்சியில்விற்பனைக்கு உள்ளது.

    வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் இந்த சுபமுகூர்த்த திருநாளில் தங்களுக்கு விருப்பமான பட்டுப் புடவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் ரூ. 1000- க்கும் மேல் துணிகள் எடுக்கும் வாடிக்கை யாளர்களுக்கு புதுவை நேரு வீதி வணிக திருவிழா கூப்பன் மற்றும் புதுவை வணிகத் திருவிழா கூப்பன் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியில் அப்பகுதி மகளிர் மட்டும் குழந்தைகள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜிரியோ கராத்தே சங்க மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் சேவை இயக்கம் இளைஞரணி தலைவர் விநாயகம், ரெனோ, ஓம்சக்தி ரமேஷ், சந்திரசேகர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.

    விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஐஸ்வர்யா மற்றும் புஷ்பா செய்திருந்தனர்.

    ×