என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் போலி மதுபானங்கள் தயாரி க்கப்பட்டு தமிழகத்துக்கு கடத்தப்ப டுவதாக கலால்துறை ஆணையர் சுதாகருக்கு தகவல் கிடைத்தது.
    • ரு மினிவேன் 280 அட்டை பெட்டிகளில் 22 வகையான மதுபானங்க ளுடன் வைக்கோல் கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி மதுபானங்கள் தயாரி க்கப்பட்டு தமிழகத்துக்கு கடத்தப்ப டுவதாக கலால்துறை ஆணையர் சுதாகருக்கு தகவல் கிடைத்தது.

    அவரின் உத்தரவின்பேரில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் குமரன், வீரமுத்து, சதீஷ், விஜயன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை கடந்த நவம்பரில் ரூ.11 லட்சம், டிசம்பரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள், எரிசாராயத்தை கைப்பற்றியது.

    இந்த நிலையில் அரியூர் பங்கூர் சாராயக்கடை எதிரே பண்ணை வீட்டில் மதுபானங்கள் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். ஒரு மினிவேன் 280 அட்டை பெட்டிகளில் 22 வகையான மதுபானங்க ளுடன் வைக்கோல் கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

    அந்த வீட்டை முழுமையாக சோதனையி ட்டபோது போலி மது தயாரிக்க தேவையான எரிசாராயம், வண்ண திரவம், காலிபாட்டில்கள், மூடிகள் போன்ற பொருட்கள் இருந்தது. இவை அனைத்தையும் கைப்பற்றிய தனிப்படை யினர் அங்கிருந்த பிரபு, லூர்துநாதன், மோதிலால், லட்சுமிநாராயணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், வாகனம் உட்பட பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். வாகன உரிமையாளர், வீட்டின் உரிமையாளர், மதுபான தயாரிப்பு, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து கலால்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் சார்பில் பாரத்ஜோடோ யாத்திரை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மருதுபாண்டியன் மற்றும் இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் பொருப்பாளர் ராஜாகுமார் மற்றும் சண்முகம், மஞ்சினி மற்றும் ஈரம் பவுண்டேசன் நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் சார்பில் பாரத்ஜோடோ யாத்திரை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வட்டார காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பி.சி.சி. உறுப்பினர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தா பாபு, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சதிஷ் குமார், சமூக வளைதலத் தலைவர் பிரியன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சுரேஷ், வேலு, சதீஷ், சிவசங்கரன், லட்சுமி காந்தன், வட்டாரத் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி அம்சா, மேரி, ரபீனா பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், புதுவை காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் மற்றும் இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் பொருப்பாளர் ராஜாகுமார் மற்றும் சண்முகம், மஞ்சினி மற்றும் ஈரம் பவுண்டேசன் நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது.
    • கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் முருகன் தகவல் தெரிவித்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது.

    பஸ்சை புதுவை வாணரபேட்டையைச் சேர்ந்த முருகன் ஓட்டி சென்றார். அப்போது போதையில் பஸ்சில் ஏறிய 4 பேர் கண்டக்டரிடம் சென்னைக்கு செல்வதாக கூறி இருக்கையில் அமர்ந்தனர்.

    பஸ் முருகா தியேட்டர் அருகே கொக்கு பார்க் சென்றவுடன் போதை ஆசாமிகள் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் பஸ்சை நிறுத்துங்கள் என கண்டக்டரிடம் கூறியதையடுத்து டிரைவர் முருகன் பஸ்சை நிறுத்தினார்.

    பின்னர் அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு பஸ்சில் ஏறினர். பஸ் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையர்பாளையம் சென்றதும் போதை கும்பலில் இருந்த மற்றொருவர் சிறுநீர் கழிப்பதாக பஸ்சை நிறுத்த சொன்னார்.

    அப்போதும் பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகன், ஒவ்வொரு இடமாக பஸ்சை நிறுத்த முடியாது. சீக்கிரம் சென்று பஸ்சுக்கு வரும்படி கூறினார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டரிடம் போதை ஆசாமிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கீழே இறங்கிய அவர்கள் சாலையில் கிடந்த கருக்கலை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியை நோக்கி வீசினர்.

    இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ச்சி அடைந்த பயணிகள் கீழ இறங்கி கல் வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

    உடனே இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் முருகன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சென்னை எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 23) என்பதும், நண்பர்களுடன் புதுவை வந்து மது அருந்திவிட்டு சென்னை திரும்பும் பொழுது இவர்கள் தகராறு செய்ததும் பெரிய வந்தது. விஜயகுமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.
    • நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.

    இதை அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணிதுறை அதிகாரியிடம் தெரிவித்து அதனை விரைந்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    ஆனால் மார்ச் மாதம் வரை அவகாசம் கேட்டதால் உடனே நகராட்சி இயக்குனர் சிவக்குமார் மற்றும் டாக்டர் துளசிராமனிடம் செல்போனில் பேசி அங்குள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக கழிவு நீரை உறிந்து எடுக்கும் நவீன எந்திரம் பொருத்திய லாரியை வரவைத்து நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    மேலும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ப-வடிவ வாய்க்காலையும் தூர்வாரி சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் காளப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், தி.மு.க.வை சேர்ந்த இருதயராஜ், ஈசாக், மரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த புதுவை லேபிள் ஒட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 250 பெட்டி பீர் மற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • மதுபாட்டில்கள் வைக்கோல் லாரி மூலம் தமிழக பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்க இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அடுத்த அரியூரை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமான தனி வீடு, சின்னபாபுசமுத்திரம் செல்லும் சாலையில் அரியூர் ஏரிக்கரை பகுதியில் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் லாரியில் கொண்டு வரப்படும் எரிசாராயத்தில் சில பொருட்களை கலந்து மதுபாட்டில்களில் பிடித்து, புதுவை மதுபான லேபிள் ஒட்டப்பட்டு தமிழக பகுதிக்கு கடத்தி விற்கப்படுவதாக ரகசிய தகவல் கலால் துறைக்கு கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு கலால் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று திடீரென அந்த வீட்டை ஆய்வு செய்தனர்.

    அப்போது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த புதுவை லேபிள் ஒட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 250 பெட்டி பீர் மற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அந்த மதுபாட்டில்கள் வைக்கோல் லாரி மூலம் தமிழக பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்க இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இடத்தின் உரிமையாளர் திடீரென மாயமானதால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி மதுபான தொழிற்சாலையை அவர் நடத்தி வந்தாரா? அல்லது வாடகை எடுத்து வெளிநபர்கள் நடத்தி வந்தனரா? என கலால் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவை பா.ஜனதா சார்பில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கிரிக்கெட் கோப்பையை அறிமுகம் செய்து குலுக்கல் முறையில் விளையாட்டு அணியை தேர்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா சார்பில் நமோ கிரிக்கெட் 2023 போட்டி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கிரிக்கெட் கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கிரிக்கெட் கோப்பையை அறிமுகம் செய்து குலுக்கல் முறையில் விளையாட்டு அணியை தேர்வு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி துணைத் தலைவர்கள் உமாசங்கர், ராக் பெடரிக், மாநில செயலாளர்கள் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் மாநில வணிகர் பிரிவு இணை அமைப்பாளர் சீனிவாசப்பெருமாள், ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்‘ என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கிறது.100 சதவித வாக்குப்பதிவை இலக்காக கொண்டு புதுவை தேர்தல் துறை பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. புதுவை பாரதி பூங்காவில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 250 அடி நீளமுள்ள வெள்ளை பேனரில் புதுவையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது கற்பனைக்கு ஏற்ப வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் மாணவர்களோடு இணைந்து ஓவியம் வரைந்து உற்சாகப்படுத்தினார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்' என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    இதில் இளம் வாக்காளர்களான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாக்களி க்கப்பதன் முக்கிய த்துவத்தை வலியுறுத்தி ஓவியங்களை வரைந்துள்ளனர். வரும் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் காமராஜர் மணி மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். தலைமை செயலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த ஓவியங்களுக்கு பரிசளிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடை–பெறுவது வழக்கம்.
    • புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சூரிய உதயத்துக்கு முன்பு பொதுமக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.

    விழாவையொட்டி பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், சேலியமேடு, சேலியமேடு பேட், கரைமேடு உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் டிராக்டர் மற்றும் பல வாகனங்களில் ஊர்வலமாக தென் பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.திருவிழாவில் பாகூர், சோரியாங்குப்பம் மற்றும் புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆற்று திருவிழாவையொட்டி சோரியாங்குப்பம் பகுதி–யில் இருந்த மதுக்கடை சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

    இதேபோல் கரை–யாம்புத்தூர், சொரப்பூர், கலிஞ்சிக்குப்பம், கலிஞ்சி–க்குப்பம் பேட், வீராணம் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை–யொட்டி ஆற்றங்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீய–ணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    • உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி::

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மனித நேய மக்கள் சேவை நிறுவன தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்க இளைஞரணி தலைவர் விநாயகம், கோஜுரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
    • பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் பறந்தது ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் இன்று பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது.

    இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கியவரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார்.

    அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    • மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
    • புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    புதுச்சேரி:

    புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.

    புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.

    மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.

    இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

    அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும் என்றார்.

    விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
    • நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார்.

    புதுச்சேரி:

    புதுவை கடலூர் சாலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கத்திற்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு பேசியதாவது:-

    புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இங்கு போதிய டாக்டர்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

    இதை முதலமைச்சர் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வக்கீல்களுக்கு உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட வேண்டும். யோகா மையமும் அமைக்கப்பட வேண்டும். இவை அமைந்தால் மருத்துவ சிகிச்சை மையமே தேவைப்படாது.

    இது நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக அமையும். நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார். நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம்.

    நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும். தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். வரும் காலத்தில் கோர்ட்டில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×