என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சோரியாங்குப்பம்-கரையாம்புத்தூரில் ஆற்றுத்திருவிழா
    X

    சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்று திருவிழாவில் உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்ற காட்சி.

    சோரியாங்குப்பம்-கரையாம்புத்தூரில் ஆற்றுத்திருவிழா

    • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடை–பெறுவது வழக்கம்.
    • புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-வது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சூரிய உதயத்துக்கு முன்பு பொதுமக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.

    விழாவையொட்டி பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், சேலியமேடு, சேலியமேடு பேட், கரைமேடு உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் டிராக்டர் மற்றும் பல வாகனங்களில் ஊர்வலமாக தென் பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.திருவிழாவில் பாகூர், சோரியாங்குப்பம் மற்றும் புதுவை, தமிழக பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆற்று திருவிழாவையொட்டி சோரியாங்குப்பம் பகுதி–யில் இருந்த மதுக்கடை சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.

    இதேபோல் கரை–யாம்புத்தூர், சொரப்பூர், கலிஞ்சிக்குப்பம், கலிஞ்சி–க்குப்பம் பேட், வீராணம் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை–யொட்டி ஆற்றங்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீய–ணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×