search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி-கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியம்
    X

    மாணவர்கள் வரைந்த ஓவியத்தை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் பார்வையிட்ட காட்சி. 

    பள்ளி-கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியம்

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்‘ என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுகடந்த 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கிறது.100 சதவித வாக்குப்பதிவை இலக்காக கொண்டு புதுவை தேர்தல் துறை பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. புதுவை பாரதி பூங்காவில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 250 அடி நீளமுள்ள வெள்ளை பேனரில் புதுவையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது கற்பனைக்கு ஏற்ப வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் மாணவர்களோடு இணைந்து ஓவியம் வரைந்து உற்சாகப்படுத்தினார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்களிப்பதே சிறந்தது நிச்சயமாக வாக்களிப்போம்' என்று வாசகத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    இதில் இளம் வாக்காளர்களான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாக்களி க்கப்பதன் முக்கிய த்துவத்தை வலியுறுத்தி ஓவியங்களை வரைந்துள்ளனர். வரும் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் காமராஜர் மணி மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். தலைமை செயலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த ஓவியங்களுக்கு பரிசளிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×