என் மலர்
நீங்கள் தேடியது "போலி மதுபான தொழிற்சாலை"
- வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த புதுவை லேபிள் ஒட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 250 பெட்டி பீர் மற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
- மதுபாட்டில்கள் வைக்கோல் லாரி மூலம் தமிழக பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்க இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அடுத்த அரியூரை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமான தனி வீடு, சின்னபாபுசமுத்திரம் செல்லும் சாலையில் அரியூர் ஏரிக்கரை பகுதியில் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் லாரியில் கொண்டு வரப்படும் எரிசாராயத்தில் சில பொருட்களை கலந்து மதுபாட்டில்களில் பிடித்து, புதுவை மதுபான லேபிள் ஒட்டப்பட்டு தமிழக பகுதிக்கு கடத்தி விற்கப்படுவதாக ரகசிய தகவல் கலால் துறைக்கு கிடைத்தது.
அதன்பேரில் நேற்று இரவு கலால் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று திடீரென அந்த வீட்டை ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த புதுவை லேபிள் ஒட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 250 பெட்டி பீர் மற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த மதுபாட்டில்கள் வைக்கோல் லாரி மூலம் தமிழக பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்க இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இடத்தின் உரிமையாளர் திடீரென மாயமானதால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி மதுபான தொழிற்சாலையை அவர் நடத்தி வந்தாரா? அல்லது வாடகை எடுத்து வெளிநபர்கள் நடத்தி வந்தனரா? என கலால் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






