என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாணவர்களுக்கு லேப்டாப்- சைக்கிள்-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
- அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பா ளையத்தில் நடந்த சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறையின் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
உதவித் தொகை
புதுவையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். இம்மாதம் முதல் புதிதாக 16 ஆயிரத்து 769 பேர் உதவித்தொகை பெற உள்ளனர். சட்டசபையில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.
அரசு பள்ளி மாணவர்க ளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தோம். இத்திட்டங்கள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும். எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.
மாற்றுத்திறனா ளிகளுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட்டு பல துறைகளில் முதலிடத்தை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






