என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
    • ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தின் கவர்னர் தமிழசை ஆந்திரா, புதுவையை தொடர்ந்து தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அடிக்கடி தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார். தமிழ்நாட்டை பற்றி நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது என்று சவால் வேறு விடுகிறார்.

    மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், ஜார்கண்ட் கவர்னர் .பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்படியா பேசுகிறார்கள்? அவர்களுக்கு இல்லாத தமிழ்நாட்டு பாசமா தமிழிசைக்கு உண்டு 10முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்து பல தலைவர்களுடன் மக்கள் பணியாற்றிய முதுபெரும் திராவிடத் தலைவர், தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனை, ஒருமுறைகூட தேர்தலில் வெற்றி பெற இயலாத தமிழிசை சவால் விடுவதை ஏற்க முடியாது.

    கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்தபோது தாமரையை மலர வைப்பேன் என மூச்சுக்கு முப்பது முறை கூறி முடியாமல் போனதை இப்போது நிறைவேற்றலாமா என மனக்கணக்கு போட்டு தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார்.

    புதுவை மக்களின் விருப்பத்தை, முடங்கி கிடக்கும் திட்டங்களை நிர்வாகியாக செயல்படுத்துங்கள். பெஸ்ட் புதுவையை உருவாக்க உழையுங்கள். ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள். இதை விட்டுவிட்டு 3வதாக இன்னொரு மாநிலத்தை ஆள ஆசைப்படுவதையும், எங்கள் கழகத்தின் மூத்த அமைச்சர் பற்றி விமர்சனம் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு சிவகாமி நகர், சேரன் வீதியை சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி பரிதா (39). இவர் சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் வங்கியில் இருந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி சங்கரி (38) என்பவருக்கு தனிநபர் கடனாக ரூ. 1.50 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    அதில் ரூ.75 ஆயிரம் அவரிடம் கடனாக பெற்று அதற்கான வங்கியில் செலுத்து வதற்கு அவ்வப்போது பணம் சங்கரிடம் கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் செலுத்திய பணத்தை சங்கரி முறையாக செலுத்தாமல் விட்டுவிட்டார். இதனால் வங்கி ஊழியர்கள் கடன் பெற்றுத் தந்த பரிதாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக இருதரப்பிடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

    புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பெண்களிடம் சமாதானம் செய்து வைத்து சங்கரியை பணம் செலுத்த கூறினர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் சாலை யோர கடை வைத்து வியாபாரம் செய்து வந்த பரிதாபை அங்கு வந்த சங்கரி அசிங்கமாக திட்டி மானப ங்கம் படுத்தி இரும்பு கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.

    இது சம்பந்தமாக புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மணவௌி கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மத்திய அரசின் தூய்மை பாரத் திட்டத்தில் பொது உறிஞ்சுக் குழி (அமைக்க ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் மற்றும் வில்லியனூர் எம்.என்.ஆர். நகர், மாதா கோவில் விரிவாக்கம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் செம்மண் சாலை அமைக்க ரூ. 3 லட்சத்து 61 ஆயிரம் என மொத்தம் ரூ. 7 லட்சத்து 76 ஆயிரம் நிதி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    எதிர்க்கட்சித் தலைவருமான. சிவா பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர்கள் சந்திரசேகரன், ராமன், இளநிலைப் பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் கலைச்செல்வி, திரிபுரசுந்தரி மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். செம்மன் சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    • மேலும் கும்பலை பிடிக்க சி.சி.டி.வி. கேமரா மூலம் வேட்டை
    • மோதலில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கரியமாணிக்கம் காலணி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரு கோஷ்டிக்கிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

     இந்த மோதலில் போலீசார் தாக்கப்பட்டதோடு போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இந்த கலவரத்தில் ரஜினி தரப்பு மற்றும் நரேந்திரன் தரப்பு என 13பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் 5பேரை போலீசார் கைது செய்தனர். ரஜினி தரப்பில் பெரியாண்டர், பவாணி சங்கர் என 2 பேரும், நரேந்திரன் தரப்பில் நரேந்திரன், பாரதிராஜா, கதிரவன் (எ) விஜயபிரபாகரன் என 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    மேற்கொண்டு சி.சி.டி.வி கேமராவில் பதிவான பதிவுகளை கொண்டு மோதலில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

    • தாய் வீட்டிற்கு சென்று வாழுமுனி பார்த்தபோது அங்கும் அவர் வரவில்லை என்பது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காதேவியையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர் வாழுமுனி (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி துர்காதேவி (வயது 23) இவர்களுக்கு தீபிகா(5) என்ற மகளும், பர்வேஸ்வரன் (2 ½) என்ற மகனும் உள்ளனர்.

    தீபிகா வாழுமுனியின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறார். துர்காதேவி எப்போதும் செல்போனில் யாரு டனாவது பேசிக்கொண்டே இருப்பாராம்.

    இதனை வாழுமுனி பலமுறை கண்டித்துள்ளர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி  துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

    இரவு வாழுமுனி வேலையை விட்டு வீட்டிற்கு வந்த பிறகும் துர்கா வரவில்லை. இதனால் துர்காவின் தாய் வீட்டிற்கு சென்று வாழுமுனி பார்த்தபோது அங்கும் அவர் வரவில்லை என்பது தெரியவந்தது.

    தனது மகனுடன் அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காதேவியையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு பொது மக்கள் பாராட்டு
    • கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியை சார்ந்த அழகர்சாமி வீதி மற்றும் ரங்கநாதன் வீதிகளில் 7 வருட காலமாக பொதுப்பணித்துறை மூலம் விநியோகிக்கப்படும் குடித்தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    அனிபால்கென்னடி எம்.எம்.ஏவிடம் மனு அளித்தனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை துணைப் பொறியாளர் வாசன், செயற்பொறியாளர் முருகானந்தம், இளநிலை ப்பொறியாளர் வெங்கடேசன், ஆகியோரிடம் அனிபால்கென்னடி எம்.எம்.ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு வைத்தார்.

    அவரின் தொடர் முயற்சியால் 7ஆண்டு காலமாக நிலவி வந்த குடி நீர் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது.

    தற்போது அனைத்து பொது மக்கள் வீட்டிலும் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ.வை பாராட்டினர்.

    தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜு, கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்

    • மாணவர், பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
    • புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளின் 100-சதவீத இடங்களையும் இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் மூலம் தான் கலந்தாய்வு நடத்தப்படும். அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசு ஒதுக்கீடு மற்றும் இடஒது க்கீடு குறித்த விபர ங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான மாநில அரசின் பெறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

    அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தி இந்த மாதத்திலேயே முடிவு செய்து மருத்துவ கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிய வருகின்றது.

    இதனால் புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மாநில அரசின் சாதி அடிப்ப டையிலான இடஒதுக்கீடும், பிற இடஒதுக்கீடுகளும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

    ஆகவே புதுவை அரசு 2023-24-ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை சென்டாக் மூலம் நடத்துமா? தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா? என்ற விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
    • கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் முழுமையான அதிகாரம் இல்லை என்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என அரசு விழாக்களில் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் மாநில அந்தஸ்து வேண்டும் என சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்து கேட்க உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    யூனியன் பிரதேசமான டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

    ஆனால் கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுவை கம்பன் விழாவை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சுப்ரீம்கோர்ட்டு டெல்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

    டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே? என கேட்டதற்கு, 'இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம் என தெரிவித்தார்.

    தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறும்போது, மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும் என்றார்.

    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
    • துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், புதுவை மாநிலத்தில் முதன்முறை யாக மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை துவங்கப்பட்டது.

    இதனை மணிப்பால் மங்களூரு பல்கலைக்கழத்தின் துணை வேந்தர். வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

    விநாயகா மிஷன் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஆறுபடை வீடு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கோட்டூர், பன்முகத்துறை முதல்வர் மகாலட்சுமி மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் விஷ்ணு பட், மருத்துவ ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநர் ரவிக்குமார் உள்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை பட்ட படிப்பிற்கு இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மருத்துவத்துறையின் மேம்பட்ட உயிர் தொழில் நுட்பங்களை கற்பதின் மூலம் மருத்துவத்துறையில் ஆற்றல் மிகு நோய் கட்டுப்பாடுகள், முன்னேறிய மருந்துகளின் செயல்பாடுகள், நவீன நோய் நடுப்பூசி தயாரித்தல் மற்றும் விரைவான நோய்க் காரணிகளை கண்டறிதல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    • அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(47). தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் நெட்டப் பாக்கம் அடுத்த மடுகரை இந்திரா நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    முருகேசன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். விஜயலட்சுமி புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் கடந்த 2 ஆண்டுகளாக அரியூரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அதிக மது அருந்தி வீட்டுக்கு வந்த முருகேசன் திடீரென சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு வந்து வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது.

    உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
    • அ.தி.மு.க .குமுதன், என்.ஆர் காங்கிரஸ் சுந்தர்ராசு, புருஷோத்தமன் மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அரசு கூட்டுறவுத்துறை புதிய கட்டிட திறப்பு விழா  நடைபெற்றது.

    சட்டப்பேரவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கனார். முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி கட்டிடத்தை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி இயக்கு னர்கள் பழனி என்கிற தனரா சக்திவேல் என்ற சுப்பிரமணியன் மேலாளர் குமாரவேல், பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர், அ.தி.மு.க .குமுதன், என்.ஆர் காங்கிரஸ் சுந்தர்ராசு, புருஷோத்தமன் மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
    • ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.

    அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.

    இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

    கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.

    'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.

    இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    ×