என் மலர்
புதுச்சேரி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரநிலைக் மேம்பாட்டு கழகம் இயக்குனர்.
புதுச்சேரி:
புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகம் (பாட்கோ) மூலம் ஆதிதிராவிட மக்கள் சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரம் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 428 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10,000 மானியத்துடன் தலா 50,000 வீதம் ரூ.2 கோடி 50 லட்சம் வழங்க அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த மானிய கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சியை சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரநிலைக் மேம்பாட்டு கழகம் இயக்குனர்.
அசோகன், பொது மேலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனிராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சம்பத் எம்.எல்.ஏ., உயர் தொழில்நுட்பகல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் அமன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் 2019-ம் ஆண்டு தே ர்ச்சி பெற்ற 361 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளும், 2020-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 471 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
புதுவை பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற 8 மாணவர்களும், கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த 23 மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் உதய சூரியன் வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சங்க தலைவர்கள் முருகன், உதயராஜ் தலைமை வகித்தனர்.
- இந்தியகம்யூ நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி, மாணவர் பெருமன்ற செயலாளர் முரளி நோக்கவுரையாற்றினர்.
புதுச்சேரி:
இந்திய மல்யுத்த விளை யாட்டு வீராங்கணைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங்கை பதவிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர்கள் முருகன், உதயராஜ் தலைமை வகித்தனர்.
நிர்வாகிகள் சிவராம கிருஷ்ணன், உமாசங்கரி, பிரவீன், ஆகாஷ் முன்னிலை வகித்தனர். இந்தியகம்யூ நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி, மாணவர் பெருமன்ற செயலாளர் முரளி நோக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர், இளைஞர் பெருமன்றத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
- மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறை சார்பாக சாரியஸ் 2023 என்ற தலைப்பில் தொழில்நுட்ப சிம்போசியம் என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.
கருத்தரங்கில் மாணவர்களின் தனித்தி றமையை வெளிப்படுத்தவும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான வழிமுறை களை செயல்படுத்தவும் ஆலோ சனைகளை மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர் களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீராண்டீஸ்வரி புவனேஸ்வரி, மஞ்சுளா, இந்துமதி, ஆதித்யன் மற்றும் லட்சுமிபிரியா செய்து இருந்தனர்.
இதில் பல்வேறு துறையின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொழில்நுட்ப துறையின் பேராசிரியை மாலதி நன்றி கூறினார்.
- ஏ.ஐ.சி.சி.டி.யு. வலியுறுத்தல்
- உரிமம் வழங்கி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் பாதுகாத்திட வேண்டும்
புதுச்சேரி:
புதுவை உடல் உழைப்பு சங்கம் ஏ.ஐ.சி.சி.டி.யு பொதுசெயலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை முழுவதும் உள்ள நிலையான அங்காடி வணிகர்கள் நகரம் முழுவதும் நகரும் வாகனங்களில் வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என கோருவது துரதஷ்டவசமானது.
நகராட்சி அங்காடிகளில் போதுமான இடம் கிடைக்கா தோர், தங்கள் வாழ்வாதார த்திற்காக நகரும் வாகனங்கள் மூலம் சிறு வணிகம் செய்து வருவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு தடை விதிக்க கூடாது.
அவ்வாறு வணிகத்தில் ஈடுபடும் அனைவருக்கும், உரிமம் வழங்கி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் பாதுகாத்திட வேண்டும்
இவ்வாறு விஜயா அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ந் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகாசூர வதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதனையொட்டி திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா, வான வேடிக்கை யுடன் நடைபெற்றது.
- தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த முதியவரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர்.
- லேசான காயமடைந்த அவரிடம் விசாரித்தபோது, கிணற்றில் விழுந்து 3 நாட்கள் ஆகிறது, 2 நாட்கள் ஆகிறது என முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் பாவாடை (70). இவர்கடந்த 10-ந் தேதி புதுவை மடுகரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அன்று இரவு மீண்டும் ஊர் திரும்பி சென்றார். அப்போது மடுகரை பட்டாம்பாக்கம் சாலையில் சென்றபோது மழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் ஒதுங்கினார். அப்போது 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் 2 அடி தண்ணீர் இருந்ததால் அவருக்கு பலமான அடிபடவில்லை. தன்னை காப்பாற்ற கூக்குரல் எழுப்பினார்.
ஆனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பாவாடையின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
இதனால் தொடர்ந்து கூக்குரலிட்ட அவர் மயங்கினார். நேற்று காலை அவருக்கு லேசாக மயக்கம் தெளிந்தது.
இதனையடுத்து மீண்டும் தன்னை காப்பாற்றும்படி கத்தியுள்ளார். அப்போது அந்த வழியே சென்ற ஒருவர் முதியவர் குறித்த தகவலை மடுகரை தீயணைப்பு நிலையத்துக்கு கொடுத்தார்.
தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த முதியவரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர். நெற்றி உட்பட லேசான காயமடைந்த அவரிடம் விசாரித்தபோது, கிணற்றில் விழுந்து 3 நாட்கள் ஆகிறது, 2 நாட்கள் ஆகிறது என முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார்.
இதையடுத்து அவருக்கு மடுகரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவரை பட்டாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.
- புதுவையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
- பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று தலைமை கழகத்தில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும், எம்.ஜி.ஆர் சிலை ஜெயலலிதா உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்திலும், முல்லா வீதியில் உள்ள ஹஜ்ரத் சையத் அஹமத் மவுலா சாஹீப் வலியுல்லாஹ் தர்காவிலும் பிரார்தனை நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, பி எல் கணேசன், வி.கே. மூர்த்தி, காந்தி, குமுதன், மணவாளன், , நகர கழக செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமிஉட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாமுத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மாநில கழக இணை செயலாளர் காசிநாதன், மாநில கழக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி கழக செயலாளர் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன், நகர கழக செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம்மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான், இளைஞர் அணி இணை செயலாளர் கன்னியப்பன், அஜய், தொகுதி கழக இணை செயலாளர் தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், ஜெயபால், பாண்டு, ஷாஜகான், குப்பன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, எத்திராஜ், பிரபா, நாடாராஜ் ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்ட நெரிசலில் பெண் மயங்கி விழுந்தார்
- விவசாயி மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் கறவை மாடுகளுக்கு தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீவனம் பாகூர் கால்நடை ஆஸ்பத்திரியில் முதல் வழங்கப்படுகிறது.
இந்த தீவனம் நேற்று எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் வழங்கப்படுவதால் தகவல் அறிந்த கால்நடை வளர்ப்போர் பனித்திட்டு முதல் கடுவனூர் வரையிலுள்ள பயனாளிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடினர்.
இதில் 3 மாதத்திற்கு ஒருமுறை என ஒருவருக்கென 50 கிலோ எடைகொண்ட நாலரை மூட்டை தீவனம் வழங்கப்படுகிறது. குறைந்த அளவே வந்திருப்பதாக கருதி விவசாயிகள் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.
இந்த தீவனம் வழங்க 2 ஊழியர்கள் மட்டுமே செயல் பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் வாய் தகராறு, கைகலப்பும் அவ்வப்போது நடந்து வந்தது. இதில் கன்னியகோயில் அடுத்த புதுநகர் பகுதியை சேர்ந்த இந்திராணி(60) என்ற விவசாயி பெண் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த மற்றவர்கள் அவரை மீட்டு முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். கால்நடை தீவனம் வாங்க வந்த பெண் விவசாயி மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இத்தகவல் அறிந்தவுடன் பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நீண்ட வரிசையாக செல்ல ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இருந்த போதும் நீண்ட நேரம் காத்திருப்பதால் அங்கு வயது முதிர்ந்த விவசாயிகள் தவிக்கின்றனர். அரசு அனைத்து கிராம பயனாளிகளுக்கும் ஒரே பகுதியில் வழங்கப்ப டுவதால் கூட்ட நெரிசலால் சிக்கி தவிப்பதாகவும் வாங்கும் பொருளை எடுத்துச் செல்ல மிகவும் சிரமமாகவும் இருப்பதாக தெரி விக்கின்றனர்.
எனவே அரசு கிளை மருத்துவ நிலையம் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து பகுதியிலும் இருந்து வருகிறது. அங்க உள்ள ஊழியர்களை கொண்டு வழங்கினால் கூட்ட நெரிசலை தவிர்த்து, கால்நடைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தீவனமும் சிரமமின்றி எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கின்றனர்.
அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தடையில்லா தீவனமும் நேரடியாக விவசாயிகளுக்கு சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மரியாதை
- அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோரது தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மறைந்த ராமநாதனின் 75-வது பிறந்தநாள் பவள விழா பாகூரில் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி குருவிநத்தம் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் மறைந்த ராமநாதனின் படத்துக்கு மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனைத்து கட்சி அமைச்சர்கள், எம்.பி., என்.ஆர்காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் என அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும், ஆர்.ஆர். பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பாகூர் தொகுதி முழுக்க நடத்தப்பட்ட மகளிருக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதன் பிறந்தநாள் விழாவை பவள விழாவாக கொண்டாடி வரும் அவரது ஆதரவாளர்கள் அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மேலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாகூர், கொரவள்ளிமேடு, கன்னியகோயில், வார்க்கால் ஓடை உள்ளிட்ட 6 இடங்களில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழாவும் நடந்தது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக செடல் உற்சவம் நடைபெற்றது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதிற்குட்பட்ட மணக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பால்குடம் எடுத்தல், எல்லை காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், பூங்கரகம் ஜோடித்தல், மாரியம்மனுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக செடல் உற்சவம் நடைபெற்றது.
பக்தர்கள் அலகுகுத்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ரகுபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
- ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தின் கவர்னர் தமிழசை ஆந்திரா, புதுவையை தொடர்ந்து தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அடிக்கடி தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார். தமிழ்நாட்டை பற்றி நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது என்று சவால் வேறு விடுகிறார்.
மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், ஜார்கண்ட் கவர்னர் .பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்படியா பேசுகிறார்கள்? அவர்களுக்கு இல்லாத தமிழ்நாட்டு பாசமா தமிழிசைக்கு உண்டு 10முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்து பல தலைவர்களுடன் மக்கள் பணியாற்றிய முதுபெரும் திராவிடத் தலைவர், தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனை, ஒருமுறைகூட தேர்தலில் வெற்றி பெற இயலாத தமிழிசை சவால் விடுவதை ஏற்க முடியாது.
கவர்னர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்தபோது தாமரையை மலர வைப்பேன் என மூச்சுக்கு முப்பது முறை கூறி முடியாமல் போனதை இப்போது நிறைவேற்றலாமா என மனக்கணக்கு போட்டு தமிழ்நாடு அரசியலில் மூக்கை நுழைக்கிறார்.
புதுவை மக்களின் விருப்பத்தை, முடங்கி கிடக்கும் திட்டங்களை நிர்வாகியாக செயல்படுத்துங்கள். பெஸ்ட் புதுவையை உருவாக்க உழையுங்கள். ஒன்றிய அரசில் மாநிலத்திற்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள். இதை விட்டுவிட்டு 3வதாக இன்னொரு மாநிலத்தை ஆள ஆசைப்படுவதையும், எங்கள் கழகத்தின் மூத்த அமைச்சர் பற்றி விமர்சனம் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






