என் மலர்
புதுச்சேரி
- பெட்டிக்கடையில் நின்று தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து தந்தை, மகன் மற்றும் கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் ஆர்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(31). இவர் முருங்கபாக்கத்தில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11-ந்தேதி வேலை முடித்து வீட்டிற்கு சென்ற போது அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பழைய கடலூர் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் நின்று தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அர்ஜுனன் அங்குள்ள மதுக்கடையில் குடித்து விட்டு வந்தார்.அவர் விவேக்கை பார்த்து என்னை ஏன் முறைத்தாய் என்று கேட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவரது மகனுடன் சேர்ந்து அங்கு கிடந்த வாழை கட்டை மற்றும் கல்லால் விவேக்கை பலமாக தாக்கினார்.
அவரது கூட்டாளிகளும் தாக்கினர். இதில் தலை, தாடை, கண் பகுதியில் படுகாயம் ஏற்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அர்ஜூன்அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து தந்தை, மகன் மற்றும் கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.
- குழந்தையை கண்காணிக்கவும் இந்த ஸ்மார்ட் இன்குபேட்டர் உதவுகிறது.
- மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு த்துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியை நிஷாவித்திரி மற்றும் இணை பேராசிரியர் ரமேஷ் வழிகாட்டுதலின் பெயரில் இறுதியாண்டு மாணவிகள் திவ்யபாரதி, காயத்ரி, காவியா மற்றும் சாஹிதா பானு ஆகியோர் இணைந்து குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் ஸ்மார்ட் இன்குபேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தாயின் கருவறையில் இருப்பதைப் போல குழந்தைகளின் தட்பவெட்ப நிலையையும் சீராக வைத்திருக்வும் மொபைல் செயலி மூலம் எங்கிருந்தாலும் குழந்தையை கண்காணிக்கவும் இந்த ஸ்மார்ட் இன்குபேட்டர் உதவுகிறது.
இந்த கண்டுபிடிப்பின் செயல் விளக்க நிகழ்ச்சியில் மயிலம் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் மருத்துவர், நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் துறைத்தலைவர் கணேசன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
- பள்ளியில் படித்த 37 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதிய 81 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.
புதுச்சேரி:
எ ஸ் . எ ஸ் . எ ல் . சி. , பிளஸ்-2 தேர்வில் விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி சாதனைபடைத்துள்ளது. விவேகானந்தா சி.பி.எஸ்.இ.பள்ளி புதுவை அய்யங்குட்டிப்பாளையம் கோபாலன்கடையில் உள்ள விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பள்ளியில் படித்த 37 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளி மாணவர் பாலாஜி 500-க்கு 471 பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவன் மகா விக்னேஷ் 459 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சன்ஜனா பாலன் 451 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும் எடுத்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இதேபோல் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு எழுதிய 81 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது. மாணவன் கைலேஷ் 500-க்கு 485 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவிகள் திவ்யஸ்ரீ, ஜனனி ஆகியோர் தலா 476 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ராதேஷ்வரன் 475 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
400 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், மொழிப் பாடத்தில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர்கள் சரண்யா, பிரித்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
- ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது.
- பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்.
புதுச்சேரி :
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியை கொண்டாடினார்கள். புதுவை வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் பட்டடாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து ஆட்சியை அமைத்தது. 1½ ஆண்டுகளில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தங்களது அதிகார பலம், பணபலத்தை கொண்டு பா.ஜ.க. ஆட்சியை அமைத்தனர்.
இந்த ஆட்சி அமைந்தது முதல் கர்நாடக மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
- நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ மனையில் அதிநவீன அவசர சிகிச்சை மருத்துவ பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். சேர்மன் பிலிப், முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
மாணவர்கள் உயர்கல்வி பெற தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
காலாபட்டு எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசினார். நிகழ்ச்சியில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் தலைவரும் கோட்டயம் மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன், திருச்சபையின் பேராயர் டாக்டர் யுகானன் மார் டயாஸ்கோர்ஸ், சென்னை மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ், சிரியன் திருச்சபையின் பேராயர் ஜீவர்கீஸ் மார் ப்ளாக்ஸ்னஸ், புதுவை சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மெடோ ஃபார்ம் இயக்குனர் பன்னாலால் சோர்த்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் நன்றி கூறினார்.
- சாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
- முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அண்ணா நகரில் தனி கோவில் அமைந்துள்ள சொர்ணா கர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்கள் கோவிலில் அஷ்டமி திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சொர்ண பைரவி மற்றும் சொர்ணகர்ஷண சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் புதுவை சிவ.குமாரசாமி தேசிக பரமாச்சாரியார் சாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவர் ராயல், அண்ணாநகர் மற்றும் ஊர் வலப்பம் கிராம வாசிகள் செய்தனர். சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.
- அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் கம்பன் விழா தொடங்கி வரை 3 நாட்கள் நடக்கிறது. 9 மணிக்கு முத்துக்கருப்பன் பார்வதி அறக்கட்டளை சிவதாசன் சார்பில் இளையோர் அரங்கம் நடந்தது. பழனி அடைக்கலம், சுகுமாறன் முன்னிலை வகித்தனர். இலக்கியச்சுடர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
வியத்தகு தாய்மை என்ற தலைப்பில் மதன்குமார், மஸ்ருஸ்னவுப்ரா, யோகேஷ்குமார் பேசினார். 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜே.வி.எஸ் நிறுவன அறக்கட்டளை சார்பில் குடும்பத்தினர் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து 10.45 மணிக்கு செவாலியே சச்சிதானந்தம் அறக் கட்டளை சார்பில் வழக்காடு மன்றம் நடந்தது. பேராசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். இலங்கை ஜெயராஜ் நடுவராக செயல்பட்டார். இலக்குவனின் சீற்றம் ஏற்புடையதன்று என்ற பொருளில் விஜயசுந்தரி வழக்கு தொடர்ந்தார். கவிதாஜவகர் வழக்கை மறுத்து பேசினார்.
இன்று மாலை 5 மணிக்கு பட்டம்மாள் கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் முகுந்தன் சார்பில் கவியரங்கம் நடக்கிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.
நெல்லை ஜெயந்தா தலைமை வகிக்கிறார். என்னை நன்றாக படைத்தனன் என்ற தலைப்பில் பிரசாந்த், தங்கம் மூர்த்தி, இனியன் ஆகியோர் கவி வாசிக்கின்றனர்.
தொடர்ந்து 6.30 மணிக்கு சப்தகிரி சிவகொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார். சேர்ந்தவருள் சிறந்தவர் என்ற தலைப்பில் அறிவொளி, கோவிந்தராசு, வாசுதேவா, புதுக்கோட்டை பாரதி, சீனுவேணுகோபால், உமாசங்கர், இளங்கோ, சிதம்பரம், சரவண செல்வன் குகன், சுக்ரீவன், வீடணன் சார்பில் பேசுகின்றனர்.
- பாசிக் முன்னேற்ற சங்கம் முடிவு
- சம்பளம் வழங்கிட வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
புதுச்சேரி:
பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நிலுவை சம்பளம், மாதந்தோறும் சம்பளம், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம், 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கிட வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இன்று 23-வது நாள் போராட்டம் நடந்தது. சங்க சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன், ஆகியோர் தலைமை வகித்தனர்
ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.
ஆனால், பாசிக் ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு காண அரசு மற்றும் நிர்வாகத்தின் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கா ததால் கோரிக்கைகளை அழைத்து பேசி தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
- குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
- அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
மடுகரை பகுதியில் திரவுதியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. மடுகரை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கம்பத்தம் தெருவில் வாலிபர்கள் குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மடுகரை ராம்ஜீநகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (22) மற்றும் சொர்ணாவூர் கீழ்பாதி பகுதியை சேர்ந்த சுரேந்தர் (23) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணிய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
- இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு பொதுசெயலாளர் தனுசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதனைநாடு முழுவதும் உள்ள காங்கிரசார் இன்று கொண்டாடினர். அதேபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் காங்கிரஸ் வெற்றி கொண்டாடப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஒன்று கூடினர் அங்கிருந்து மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணிய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்
அண்ணா சாலை காமராஜர் சாலை சந்திப்பில் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் தேர்தல் வெற்றியை கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆனந்தராமன் சீனியர் துணை தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு பொதுசெயலாளர் தனுசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
- 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் சோதனை சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் படி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டுபழனி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையி லான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.
அதில் சுமார் 7 கிலோ எடையுளள சந்தர மரக் கட்டைகள் துண்டு துண்டாக இருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுவை மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பரமணி (வயது 52) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பையை எடுத்துச் சென்று பனையபுரம் பெட்ரோல் பங்க் அருகில் நிற்பவர்களிடம் அளித்து வந்தால் கூலி தருவதாக ஒருவர் கூறியதும், அதனால் இந்த பையை சுப்பரமணி எடுத்து வந்ததும் போலீ சாருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
மேலும், சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் மனு
- மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது.
புதுச்சேரி:
தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் Loan with subsidy to 428 people through Adi Dravidar Welfare Departmentதி.மு.க நிர்வாகிகள் மற்றும் கண்டாக்டர்தோட்டம் பகுதி மக்களுடன் குடிசைமாற்று வாரிய உதவிப் பொறியாளர் அனில்குமார் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதி கண்டாக்டர் தோட்டத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்த விட்டதால் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மழையில் ஒழுகி குடியிருப்புகள் சேதம டைந்துள்ளது.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடியிருப்பு புனர மைக்கப்படுகிறது.
20 ஆண்டுகள் கடந்த குடியிருப்பு என்பதால் சீர்செய்தாலும் குடியி ருப்புகளின் சிலாப்புகள், மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மேற்கண்ட குடியிருப்புகள் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, தரமான புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.






