என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car company employee"

    • பெட்டிக்கடையில் நின்று தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து தந்தை, மகன் மற்றும் கூட்டாளிகளை தேடிவருகின்றனர்‌.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் ஆர்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(31). இவர் முருங்கபாக்கத்தில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11-ந்தேதி வேலை முடித்து வீட்டிற்கு சென்ற போது அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே பழைய கடலூர் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் நின்று தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அர்ஜுனன் அங்குள்ள மதுக்கடையில் குடித்து விட்டு வந்தார்.அவர் விவேக்கை பார்த்து என்னை ஏன் முறைத்தாய் என்று கேட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவரது மகனுடன் சேர்ந்து அங்கு கிடந்த வாழை கட்டை மற்றும் கல்லால் விவேக்கை பலமாக தாக்கினார்.

    அவரது கூட்டாளிகளும் தாக்கினர். இதில் தலை, தாடை, கண் பகுதியில் படுகாயம் ஏற்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அர்ஜூன்அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

    இது சம்பந்தமாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து தந்தை, மகன் மற்றும் கூட்டாளிகளை தேடிவருகின்றனர்.

    ×