என் மலர்
புதுச்சேரி
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
- அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகரில் மின்கசிவு காரணமாக ஒரு வீடு தீ பிடித்து எரிந்தது. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் கருகியது. இதை அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்பு தன் சொந்தப்பணம் ரூ.10,000 காசோலையை வழங்கினார். மேலும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பாதிப்புக்குள்ளானவருக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதியளித்தார். நேத்தாஜி நகர் கிளை செயலாளர் செழியன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் மணி, மூத்த உறுப்பினர் பத்ராசலம், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.
- உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருபொதிகிரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் புதுவை அடுத்த பாகூர் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுபாரில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 14-ஆம் தேதி பணியில் இருந்தபோது சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சுகன், சங்கர், முருகன் மற்றும் சிலர் அங்கு வந்து ஆர்டர் செய்துள்ளனர். அப்போது அதற்கான பணம் கேட்டதற்கு பணத்தை கேஷியரிடம் கேட்கும்படி தெரி வித்துள்ளனர். இது சம்பந்தமாக சிவக்குமார், கேஷியருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது கேஷியர் கொடுத்து அனுப்பும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுகன் மற்றும் ஆறுமுகம் 2 பேரும் ஒரு கேஸ் பீர் பாட்டில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அனுமதி இல்லாமல் எடுத்ததை கண்டு சிவக்குமார், அருண்ராஜ் ஆகியோர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து சிவக்குமார் மற்றும் உடன் இருந்த அருண்ராஜ் (35) ஆகியோரை சராமாரியாக கையாளும் தடியாலும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
மேலும் நாங்கள் கேட்கும் போது சரக்கு தரவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். காயமடைந்த இருவரும் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து போலீசில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- நகராட்சி அதிகாரிகளிடம் தி.மு.க. மனு
- அப்பகுதி மக்களின் சுகாதாரம் பேனிக்காக்கவும், ஆபத்தில்லா போக்கு வரத்தை உறுதிப்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் தி.மு.க நிர்வாகிகள் புதுவை நகராட்சி உதவிப் பொறியாளர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதி, இளங்கோ நகர் வார்டுக்கு உட்பட்ட சாரதி நகர் 3 மற்றும் 4–-வது குறுக்கு தெருக்களின் இடையே செல்லும் எல் வடிவ வாய்க்கால் கனரக வாகனங்கள் வந்து சென்ற காரணத்தால் சேதமடைந்து கழிவுநீர் வௌியேற முடியாமல் உள்ளது.
இதனால் மேற்கண்ட இடங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் எல் வடிவ வாய்க்கால் உடைந் துள்ளதால் போக்கு வரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து கொடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரம் பேனிக்காக்கவும், ஆபத்தில்லா போக்கு வரத்தை உறுதிப்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற உதவிப் பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சந்திப்பின்போது தி.மு.க தொகுதி செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், அவைத் தலைவர் ஆதிநாராயணன், தொண்டர் அணி மதனா, ராஜேஷ், வர்த்தகர் அணி ஜெயப்பிரகாஷ், கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், அந்தோணி, முத்து, அகிலன், கிரி, நெல்சன், அன்பு, சரவணன், முருகன், இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் தாமரை க்கண்ணன், அன்பழகன், சத்தியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- வைத்திலிங்கம் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்
- புதுவைப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி:
மாரியப்பனார்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்தில் மேனிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவல் ஆய்வாளர், காவலர், பண்டகக் காப்பா ளர் போன்ற புதுவை அரசுப் பணிகளுக்கான இலவச பயிற்சி நிறைவு விழா,பயிற்சி கையேடு வெளியீட்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவுநர் மா.மா. மாரியப்பனார் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். நண்பர்கள் தோட்டம் தலைவர் ப.திருநாவுக்கரசு நெறியாள்கை செய்தார். விழாவில், வைத்தி லிங்கம் எம்.பி. கலந்துகொண்டு பயிற்சிக் கையேட்டை வெளியிட, வைத்திய நாதன் எம். எல்.ஏ. பெற்றுக்கொண்டார். வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: மாணவர்கள் தோல்வியைக் கண்டு கவலைப்படக்கூடாது தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டுவிட்டுக் கல்வியிலும், உழைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார் பயிற்சியின்போது நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் இடம் பிடித்த பிரகாஷ் ராஜ், சிவசக்தி மற்றும் தமிழமுது ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை அவர் வழங்கிப் பாராட்டினார்.
மு. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில்: தான் உழைப்பால் உயர்ந்ததையும், மாணவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கல்வியில் முன்னேற வேண்டும் என்றார். தட்டச்சு மாணவர்களுக்குச சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் தொழிலதிபர் குமரகுரு பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் தமிழ்மாமணி அ.டீசேன். நிழற்படக் கலைஞர் காரை இரா.நேரு, ஜீவானந்தபுரம் கிராமக்குழு ர.சபாநாயகம், தலைமை ஆசிரியர் சிகாசிநாதன், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அரசுத் தேர்வுக்காக நடத்தப்பட்ட இந்த இலவசப் பயிற்சிக்காக இடத்தை இலவசமாக அளித்த ராசகுருவின் மகன், மதியழ்கள் பாராட்டப்பட்டார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள், உதவவுகம், செந்தில்குமார், அரிமாபிரபாகரன், பாராட்டபட்டனர், அருணகிரி, இளவரசி சங்கர் ஆகியோரும்
விழாவின் இறுதியில், தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.
விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.
- பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் அமரன் (24). இவர் கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துள்ளார்.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சங்கர்(50), தரணிவேல்(50), மண்ணாங்கட்டி(47), சந்திரன்(65), சுரேஷ்(65), மண்ணாங்கட்டி(55), ஊத்துக்காட்டான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் மயக்க மடைந்து விழுந்துள்ளனர்.
உடனடியாக உறவினர்கள் ஜிப்மர் மருத்துவ மனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் சுரேஷ், சங்கர், தரணி வேந்தன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்து பார்த்தார்.
அப்போது ஜிப்மர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மண்ணாங்கட்டி ராஜீ (60), மண்ணாங்கட்டி (41) ஆகியோர் உடல்நிலை குறித்து கலெக்டர் பழனி கேட்டார். அவர்கள் இருவரும் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் குடும்பத்தாரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது பெண்கள் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- ரங்கநாதன், கலியமூர்த்தி, மங்களம், ஜெயபால், வில்லியனூர் ஜெயபால், இலியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு எதிர்க்கட்சி த்தலைவர், முன்னாள் முதல அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை யொட்டி மரக்கன்றுகள் நடும்விழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில்லியனூர் சுல்தான்பேட்டையில் நடந்தது. புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் மரக்கன்று நட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், கழக முன்னோடி வில்லியனூர் மணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் காதர்மொய்தீன் மற்றும் நிர்வாகிகள் குப்புசாமி, ரங்கநாதன், கலியமூர்த்தி, மங்களம், ஜெயபால், வில்லியனூர் ஜெயபால், இலியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கிருமாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
- நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீர மணிகண்டன் முன்னிலை வகுத்தார்.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து புதுவையில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஏம்பலம் தொகுதியில் சமூக சேவகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகரமான மோகன்தாஸ் தலைமையில் கிருமாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைவீதிகளிலும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். மேலும் கட்சி நிர்வாகிக ளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த குமரேசன், கனிக்கண்ணன், பாஸ்கர், சன் டிவி பாஸ்கர், சண்மு கம், நாராயணன் துரைசாமி, ராதா, பிள்ளையார்குப்பம் சண்முகப்பிரியன், நரம்பை ராஜேந்திரன், கனகசபை, நடராஜன், பனித்திட்டு ப ஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, சேகர், அன்பரசு, சிவக்குமார், அசோகன், கிருமாம்பாக்கம் ரவிச்சந்திரன், அருணாச்சலம், வார்டு ரத்தினம், பாலு,
விஸ்வநாதன், முத்து சேலியமேடு அய்யனார், ஆதிக்கப்பட்டு ரங்கநாதன், அரங்கனூர் கிருஷ்ண மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் தனசேகர், அருள், கோர்க்கா டு சசிதரன் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டணர். இந்த நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீர மணிகண்டன் முன்னிலை வகுத்தார்.
- மாணவர்கள் கல்வி கட்டணத்தை சென்டாக் நிர்வாகத்திலேயே கட்டி தேர்வாகும் இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள இந்த ஆண்டு முதல் நடை முறைபடுத்த வேண்டும்.
- கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்க முடியும்.
புதுச்சேரி:
புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் விண்ணப்பங்களை வெளியிட்டு நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வை காலத்தோடு நடத்தி முடிக்க வேண்டும். நர்சிங் படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தை யும் சென்டாக் நிர்வாகமே கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்.
சென்டாக் மூலம் பொறியியல் படிப்புக்கு தேர்வாகும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பும், கல்லூரியும் கிடைக்கும் வரை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும்போது மாறி மாறி கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றது. இதனால் மாணவர்கள் தேர்வாகும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி தனியாக பணம் கட்டி சேரும் சூழ்நிலை உருவாகிறது.
ஒரு கல்லூரியிலிருந்து மற்றோரு கல்லூரிக்கு தேர்வாகி மாறி செல்லும் போதும் கல்லூரி நிவாகங்கள் கட்டிய பணத்தை திருப்பி தரும் போதும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தும் ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்க கால தாமதம் ஏற்படுத்துகின்றனர்.
ஆகவே பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை சென்டாக் நிர்வாகத்திலேயே கட்டி தேர்வாகும் இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள இந்த ஆண்டு முதல் நடை முறைபடுத்த வேண்டும்.
இதனால் மாணவர்களுக்கு மன உலைச்சல், பணவிரையம், காலதாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும் அதுமட்டுமின்றி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ் தாய் நகர் பகுதியை சார்ந்த கருமாதிக்கொட்டகை மற்றும் அங்கன்வாடிக்கு பல வருட காலமாக கழிப்பிடம் இல்லை. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ, ரோட்டரி கிளப் தலைவர் சகோதரர் அனிபால் நேருவிடம் மக்கள் நலம் கருதி இக்கட்டிடங்களை அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.இதையடுத்து இக்கட்டிடங்கள் ரோட்டரி கிளப் மூலம் கருமாதி கொட்டகையில் நவீன கழிப்பிடம் மற்றும் குளியல் அறையும், அங்கான்வாடியில் நவீன கழிப்பிடமும் குளியல் அறையும் கட்டும் பணி நடக்கிறது .இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமை ப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் காந்தி மற்றும் சங்கரநாராயணன், கார்த்திக், பவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கோட்டகுப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- போலீசார் மற்றும் கலால் துறை போலீசாரிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
காலாப்பட்டு அடுத்த கணபதிச்செட்டிக்குளம் பிம்ஸ் ஆஸ்பத்திரி பல்வேறு சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்தை குறைக்கவும், அதே போல் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மது பாட்டில் கடத்தப்படுவததை தடுப்ப தற்காக கோட்டகுப்பம் போலீசார் சாலையில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் பிம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் புதிய பேரிக்காடுகளை வழங்கும்படி கோட்டகுப்பம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி ரூ 2 லட்சம் மதிப்பில் 10 பேரிகார்டுகள் புதிதாக செய்யப்பட்டு கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் கலால் துறை போலீசாரிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெரிய முதலியார் சாவடி சோதனை சாவடி அய்யனார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் பிம்ஸ் ஆஸ்பத்திரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு வளாக அபிவிருத்தி அதிகாரி பிரசன்னா சுந்தர்ராஜ், தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கோட்ட குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன்னிடம் பேரிகார்டு தடுப்பு கட்டை களை ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் மங்கை யர்க்கரசன் கலந்து கொண்டார். மேலும் இதில் கோட்டகுப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிம்ஸ் ஆஸ்பத்திரியால் வழங்கப்பட்ட பேரிக்கார்டு கள் அனைத்தும் பெரியமுதலியார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடிகளுக்கும், கோட்டகுப்பம் ரவுண்டானா மற்றும் போலீஸ் நிலைய எதிரேயும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பி.ஆர்.டி.சி .தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருக்குமரன், அய்யப்பன், ஐ.என்.டி.யு.சி குமரவேல், ஓட்டுநர், நடத்துநர் சங்கத் தலைவர் இளங்கோ மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து பேசினார்.
அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும், 15 வருடம் ஓடிய பழைய பஸ்கள் 22 நிறுத்தப்பட்டதற்கு பதில் மாற்றுப் பஸ்களை வாங்கி இயக்க வேண்டும்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி புதிய பஸ்கள் வாங்குவதற்கு துரித நடவடி க்கை எடுக்க வேண்டும்.
புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும், மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.
பல வருடமாக வழங்கப்படாமல் உள்ள 46 சதவீதம் டி.ஏவை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழிய ர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய எம்.ஏ.சி.பி.ஐ காலதா மதமின்றி விசாரணை இருப்பின் விரைவாக நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன.
கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் சந்திரபிரயங்க இன்னும் 15 நாட்களுக்குள் பேட்டரி பஸ்கள் வாங்கப்படும் என்றும் 50 புதிய பஸ்கள் ஒரு மாதத்தில் வாங்கி, புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் ஊழியர்களின் சம்பளம் பிரதி மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்தில் உள்ளது எனவும் அவைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
- பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.
- புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியாவின் கரையாக பா.ஜனதா கூட்டணி ஆட்சி புதுவை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை நிராகரித்திருக்கிறார்கள்.
பா.ஜனதாவின் இந்தத் தோல்வி கர்நாடக பா.ஜனதா அரசின் ஒட்டு மொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளை வாகும். மக்கள் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.
ரங்கசாமி தான் எப்படியாவது முதல்-அமைச்சராக இருந்தால் போதும் புதுவை மக்களை, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் விரும்பாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இல்லாத கட்சியை உருவாக்க காரணமாகிவிட்டார்.
தென்னிந்தியாவின் கரையாக புதுவையில் மட்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருப்பது புதுவை மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






