என் மலர்
புதுச்சேரி
- 100.22 டிகிரி பதிவாகி இருந்த நிலையில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்தது.
- வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் அக்னி எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை கத்தரி நீடிக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புயல் காரணமாக அக்னி தொடங்கிய முதல் நாளில் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்ட மொக்கா புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக புதுவையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அனல் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கல் வெறிச்சோடி கணப்பட்டது, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.
கடந்த 13-ம் தேதி 100.22 டிகிரி பதிவாகி இருந்த நிலையில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்தது.
நேற்றும் வெயில் அதிகரித்து 101.84 டிகிரி அள வுக்கு பதிவாகி இருந்தது. 15-ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை
- சுவரை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு கும்பலால் இரும்பு கேட் போட்டுள்ளது
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை ஒட்டியுள்ள மின்துறைக்கு சம்பந்தமான இடத்தை கடந்த மாதம் ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்தது. இதனால் அந்த இடத்தை சுற்றி கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு, இது மின்துறைக்கு சம்பந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இடத்தின் பக்கவாட்டில் உள்ள சுவரை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு கும்பலால் இரும்பு கேட் போட்டுள்ளது. அரசு இடம் என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், ஆக்கிரமிப்பு கும்பல் அத்துமீறி பூட்டு போட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்துறை சார்பில் பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள இரும்பு கேட்டை போலீசார் பாதுகாப்புடன் மின்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியா வசிய பொருட்களான, உப்பு, புளி, பருப்பு, கொ.மல்லி, மிளகாய், பூண்டு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்களையும், வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளையும், எண்ணெய் வகைகளையும் தங்களது வீட்டில் இருந்தபடியே, விலை குறைவாக 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் விற்பனை செய்கின்றனர்.
இந்த சிறு வியாபாரி களை, மக்கள் நலன் கருதி புதுவை அரசு ஊக்குவிக்க வேண்டும். இது கிராம மக்களுக்க உதவிகரமாக உள்ளது. வீடுதேடி வரும் வியாபாரிகளை தடை செய்யக்கூடாது. வீடு தேடி வழங்கி வரும் சிறு வணிகர்களை பாதுகாக்க புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கதிர்காமம் தொகுதி செயலாளராக பதவி வகிக்கிறார்
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயலாளர் வடிவேல். இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில தி.மு.க அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அணிபால் கென்னடி, சம்பத், தொகுதி துணை செயலாளர் தங்க. தமிழ்வாணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், சன்.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், தொகுதி தி.மு.க நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடி வடிவேலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக ஜிப்மர் மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு எதிரே வடிவேல் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது, சத்திய மூர்த்தி வீதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் தொ.மு.ச மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஏற்பாட்டில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் வடிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் தொ.மு.ச நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சண்முகபுரம் மார்க்கெட் பகுதியில் அன்னதானமும், ராஜீவ் காந்தி உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் உணவும் வழங்கப்பட்டது.
இன்று மாலை கதிர்காமம் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பூமியான் பேட் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு திமு.க நிர்வாகிகள் மற்றும் வடிவேல் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
- முன்னாள் எம்.பி அறிவுறுத்தல்
- மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரின் பணிகளை ஆய்வு செய்ய நடந்த கூட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஜிப்மரை மக்களுக்கு உதவும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவின் 5 சிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரின் புகழுக்கு களங்கம் விளை விக்கும் வகையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. ஜிப்மர் தன்னாட்சி பெற்ற நிறுவனம். அதனை நிர்வகிக்க நிர்வாகக் குழு, செயற்குழு இருக்கிறது. அதில் புதுவை எம்.பி, தலைமை செயலர் உறுப்பினர்களாக உள்ளனர். பரிந்துரைத்த விதிகள் தவறாக இருந்தால் அக்குழு தான் நீக்க வேண்டும்.
மாநில அரசு தனக்குத் தானே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அதன் ஆலோசனைகளை ஜிப்மர் நிர்வாக குழுவிடம் எழுத்து மூலம் கூறி குறைகளை களைந்து மக்களுக்கு நல்லது செய்யலாம். பாராளு மன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது. ஜிப்மர் மருத்துவமனை மட்டும் அல்ல அது உயர்ந்த கல்வி போதிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் சமூக சேவைக்காக பாடுபடும் ஒரு தரமான தலைசிறந்த நிறுவனம் ஆகும். அதன் புகழைக் கட்டிக்காப்பது புதுவையின் புகழைக்காப்பதற்கு சமமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் கடந்த கால ங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சைக்கிள்களை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மங்கலம் தொகுதி கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறையின் மூலம் சைக்கிள், கல்வி துறையின் மூலம் சீருடை மற்றும் தையல் கூலி ரூ.400 ஆகியவற்றை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் குமரன், இணை இயக்குனர் சுகந்தி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் சங்கர், பள்ளி முதல்வர் கேஷோவ், பள்ளி தலைமை ஆசிரியர் தனராசு, ஆசிரியர்கள் அமுதன், சுப்பிரமணியம், முரளிதரன், ஆதி, சுபசரவணன் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அமைச்சர் தங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருக்கிறார்.
- இனியும் காலம் கடத்தினால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி புதுவை மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாப்ஸ்கோ ஊழியர்களுடனான பேச்சு வார்த்தையில் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்கு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி கூடி அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வந்தனர். இதன்படி முறையாக கமிட்டி கூட்டம் நடந்து அறிக்கை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அமைச்சர் படித்து பார்த்து தேவையென்றால் அவரின் கருத்தை பதிவு செய்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். வந்த கோப்பை அமைச்சர் தங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருக்கிறார்.
இதனால் முதல்-அமைச்சர் பாப்ஸ்கோ சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அமைச்சர் கோப்பினை ஆய்வு செய்து முதல்- அமைச்சருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் கடத்தினால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வைத்திலிங்கம் எம்.பி பேட்டி
- ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும். புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாரையும் எப்போது மதிக்காத மத்திய அரசு தீர்ப்பின் உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால் எப்போதும்போல, பா.ஜனதா மத்திய அரசின் கைப்பாவையான கவர்னர் தமிழிசை, தீர்ப்பினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறியுள்ளார். புதுவை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இவை அனைத்தும் ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும்.
புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார். இதிலிருந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பாக இருந்தாலும் அதை மதிக்கமாட்டேன் என்று தடுப்பு பேசுவதை அறிய முடிகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தோர் இப்படிதான் செய்வார்கள் என்பதற்கு இந்த வார்த்தைகளே உதாரணம். தனது அதிகாரம் பறிபோகக்கூடாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுவையில் ஆளும் கூட்டணிமியிலுள்ள பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை தட்டிக்கேட்காதது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மக்களுக்கு உரிய பணி செய்வதற்கான அதிகாரத்தை ஆளும் கட்சிகள் பெறாதது ஏன்.?
புதுவை காமராஜர் என தன்னை அழைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதுபானக்கடைகளை ஊக்குவிப்பதால் காமேராஜர் பெயரை பயன்படுத்த கூடாது. கமிஷன் ஆட்சியாக கர்நாடகத்தில் பா.ஜனதா மாறியதால் தூக்கியெறியப்பட்டது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மதுபானக் கொள்ளை கமிஷனில் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் தூக்கியெறிவார்கள்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.
- தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
- ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் 23, எம்.எஸ்.சி நர்சிங் 31, எம்.பி.எஸ் 34, பி.பி.டி.என் 19, இதர பட்ட மேற்படிப்புகள் 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நுழை வுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கல்வியண்டுக்கான படிப்புகளுக்கு நுழை வுத்தேர்வு வரும் ஜூலை 2-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.
ஜூன் 14-ந் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ந் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத்தேர்வு புதுவை, பெங்களூரு, சென்னை உட்பட 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
இந்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
- தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை சமூகநலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சமூகநலத்துறை மூலம் போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புறப்நடனம், சிலம்பம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
எனவே புதுவை, காரைக்காலில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் குழுவிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலைஞர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்துடன் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை இணைத்து இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் தழுவிய விளையாட்டு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு செய்யவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- கொல்லப் பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
ஏனாம் நீளாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆந்திர மாநிலம் தலரேவு பகுதியில் தனியார் இறால் பண்ணையில் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் 14 பெண்கள் மாலை 3 மணிக்கு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தலரேவு பைபாஸ் சாலையில் வந்தபோது காக்கிநாடா நோக்கி சென்ற ஆம்னிபஸ் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் மேட்டக்குரு கிராமத்தை சேர்ந்த செஸ்டி வெங்கடலட்சுமி(41), காரிபார்வதி(42), குர்சம்பேட்டாவை சேர்ந்த நிம்மகயாலா லட்சுமி(54), ஏனாம் வெங்கன்னா நகர் சிந்தப்பள்ளி ஜோதி(38), காலி பத்மா(38), பிரான்சிதிப்பா பகுதியை சேர்ந்த போக்கா ஆனந்தலட்சுமி(47), சத்தியவதி(35) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த 7 பேர் காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஆந்திரா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிகிச்சை பெற்று வரும் பெண்களை கொல்லப் பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
- முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
- பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி (கிழக்கு) புதிதாக வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. நிர்வாகியின் அறிமுக கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.
தியாகராஜன் பி.சி.சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது.
புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் என்.ஆர். காங். மற்றும் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதென முடிவு செய்யப்பட்டது. முத்தியால்பேட்டையில் உள்ள மக்களின் குறைகளை முன்னெடுத்து போராட்டங்கள் நடத்துவது. முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து காங்கிரஸ் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் சுரேஷ், சதீஷ் குமரன் மணவாளன்,பொருளாளர் சண்முகம்,பொதுச் செயலாளர்கள் குணசேகரன், நாகராஜ் பாண்டியன், முகுந்தன் குமார், செயலாளர்கள் கோவிந்தன், விஜயகுமார், கருணா மூர்த்தி, சக்தி, பாலசுந்தரம், மேரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






