என் மலர்
புதுச்சேரி

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
தி.மு.க. பிரமுகர் பிறந்தநாள் கொண்டாட்டம்
- கதிர்காமம் தொகுதி செயலாளராக பதவி வகிக்கிறார்
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயலாளர் வடிவேல். இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில தி.மு.க அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அணிபால் கென்னடி, சம்பத், தொகுதி துணை செயலாளர் தங்க. தமிழ்வாணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், சன்.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், தொகுதி தி.மு.க நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடி வடிவேலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக ஜிப்மர் மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு எதிரே வடிவேல் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது, சத்திய மூர்த்தி வீதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் தொ.மு.ச மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஏற்பாட்டில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் வடிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் தொ.மு.ச நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சண்முகபுரம் மார்க்கெட் பகுதியில் அன்னதானமும், ராஜீவ் காந்தி உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் உணவும் வழங்கப்பட்டது.
இன்று மாலை கதிர்காமம் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பூமியான் பேட் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு திமு.க நிர்வாகிகள் மற்றும் வடிவேல் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.






