என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதுநிலை நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம்
- தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
- ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகள் 23, எம்.எஸ்.சி நர்சிங் 31, எம்.பி.எஸ் 34, பி.பி.டி.என் 19, இதர பட்ட மேற்படிப்புகள் 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நுழை வுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கல்வியண்டுக்கான படிப்புகளுக்கு நுழை வுத்தேர்வு வரும் ஜூலை 2-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது.
ஜூன் 14-ந் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ந் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத்தேர்வு புதுவை, பெங்களூரு, சென்னை உட்பட 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு ஜூலை 17-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
இந்த பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களை ஜிப்மர் இணையதளத்தில் பார்வையிடலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






