என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BIM's Hospital"

    • கோட்டகுப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    • போலீசார் மற்றும் கலால் துறை போலீசாரிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அடுத்த கணபதிச்செட்டிக்குளம் பிம்ஸ் ஆஸ்பத்திரி பல்வேறு சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றி வருகிறது.

    இந்நிலையில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்தை குறைக்கவும், அதே போல் புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மது பாட்டில் கடத்தப்படுவததை தடுப்ப தற்காக கோட்டகுப்பம் போலீசார் சாலையில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டியிருந்தது.

    இந்நிலையில் பிம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் புதிய பேரிக்காடுகளை வழங்கும்படி கோட்டகுப்பம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி ரூ 2 லட்சம் மதிப்பில் 10 பேரிகார்டுகள் புதிதாக செய்யப்பட்டு  கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் கலால் துறை போலீசாரிடம் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பெரிய முதலியார் சாவடி சோதனை சாவடி அய்யனார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் பிம்ஸ் ஆஸ்பத்திரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு வளாக அபிவிருத்தி அதிகாரி பிரசன்னா சுந்தர்ராஜ், தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கோட்ட குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன்னிடம் பேரிகார்டு தடுப்பு கட்டை களை ஒப்படைத்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் மங்கை யர்க்கரசன் கலந்து கொண்டார். மேலும் இதில் கோட்டகுப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பிம்ஸ் ஆஸ்பத்திரியால் வழங்கப்பட்ட பேரிக்கார்டு கள் அனைத்தும் பெரியமுதலியார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடிகளுக்கும், கோட்டகுப்பம் ரவுண்டானா மற்றும் போலீஸ் நிலைய எதிரேயும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.                                

    • மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ துறை சார்பில் மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    குழந்தைகள் நலத் துறை தலைவர் பீட்டர் பிரசாந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மருத்து வம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப் புகளான அலைய்டுஹெல்த் சயின்ஸ் மாணவ-மாணவிகள், குழந்தைமருத்துவர்கள் நிஷாந்த், ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×