என் மலர்
புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.
மின்கசிவால் வீடு எரிந்து சேதம்
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
- அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகரில் மின்கசிவு காரணமாக ஒரு வீடு தீ பிடித்து எரிந்தது. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் கருகியது. இதை அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அங்கு சென்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்பு தன் சொந்தப்பணம் ரூ.10,000 காசோலையை வழங்கினார். மேலும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பாதிப்புக்குள்ளானவருக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதியளித்தார். நேத்தாஜி நகர் கிளை செயலாளர் செழியன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் மணி, மூத்த உறுப்பினர் பத்ராசலம், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.






