என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஒசியில் சரக்கு கேட்டு விற்பனையாளர்களை தாக்கி கொலைமிரட்டல்
    X

    கோப்பு படம்.

    ஒசியில் சரக்கு கேட்டு விற்பனையாளர்களை தாக்கி கொலைமிரட்டல்

    • உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்‌.
    • சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருபொதிகிரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் புதுவை அடுத்த பாகூர் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுபாரில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 14-ஆம் தேதி பணியில் இருந்தபோது சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சுகன், சங்கர், முருகன் மற்றும் சிலர் அங்கு வந்து ஆர்டர் செய்துள்ளனர். அப்போது அதற்கான பணம் கேட்டதற்கு பணத்தை கேஷியரிடம் கேட்கும்படி தெரி வித்துள்ளனர். இது சம்பந்தமாக சிவக்குமார், கேஷியருக்கு போன் செய்துள்ளார்.

    அப்போது கேஷியர் கொடுத்து அனுப்பும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுகன் மற்றும் ஆறுமுகம் 2 பேரும் ஒரு கேஸ் பீர் பாட்டில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அனுமதி இல்லாமல் எடுத்ததை கண்டு சிவக்குமார், அருண்ராஜ் ஆகியோர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து சிவக்குமார் மற்றும் உடன் இருந்த அருண்ராஜ் (35) ஆகியோரை சராமாரியாக கையாளும் தடியாலும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

    மேலும் நாங்கள் கேட்கும் போது சரக்கு தரவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். காயமடைந்த இருவரும் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து போலீசில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×