என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
    X

    நகராட்சி அதிகாரியிடம் தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் மனு அளித்த காட்சி.

    சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும்

    • நகராட்சி அதிகாரிகளிடம் தி.மு.க. மனு
    • அப்பகுதி மக்களின் சுகாதாரம் பேனிக்காக்கவும், ஆபத்தில்லா போக்கு வரத்தை உறுதிப்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் தி.மு.க நிர்வாகிகள் புதுவை நகராட்சி உதவிப் பொறியாளர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உருளையன்பேட்டை தொகுதி, இளங்கோ நகர் வார்டுக்கு உட்பட்ட சாரதி நகர் 3 மற்றும் 4–-வது குறுக்கு தெருக்களின் இடையே செல்லும் எல் வடிவ வாய்க்கால் கனரக வாகனங்கள் வந்து சென்ற காரணத்தால் சேதமடைந்து கழிவுநீர் வௌியேற முடியாமல் உள்ளது.

    இதனால் மேற்கண்ட இடங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் எல் வடிவ வாய்க்கால் உடைந் துள்ளதால் போக்கு வரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து கொடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரம் பேனிக்காக்கவும், ஆபத்தில்லா போக்கு வரத்தை உறுதிப்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்ற உதவிப் பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சந்திப்பின்போது தி.மு.க தொகுதி செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் மாறன், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், அவைத் தலைவர் ஆதிநாராயணன், தொண்டர் அணி மதனா, ராஜேஷ், வர்த்தகர் அணி ஜெயப்பிரகாஷ், கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், அந்தோணி, முத்து, அகிலன், கிரி, நெல்சன், அன்பு, சரவணன், முருகன், இளைஞர் அணி தொகுதி அமைப்பாளர் தாமரை க்கண்ணன், அன்பழகன், சத்தியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×