என் மலர்
புதுச்சேரி

பாசிக் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம்
- பாசிக் முன்னேற்ற சங்கம் முடிவு
- சம்பளம் வழங்கிட வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
புதுச்சேரி:
பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நிலுவை சம்பளம், மாதந்தோறும் சம்பளம், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம், 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்கிட வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இன்று 23-வது நாள் போராட்டம் நடந்தது. சங்க சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன், ஆகியோர் தலைமை வகித்தனர்
ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.
ஆனால், பாசிக் ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு காண அரசு மற்றும் நிர்வாகத்தின் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கா ததால் கோரிக்கைகளை அழைத்து பேசி தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
Next Story






