என் மலர்
புதுச்சேரி

புதுவை கம்பன் விழாவில் இன்று இளையோர் அரங்கம் நடந்த காட்சி.
கம்பன் விழாவில் இளையோர் அரங்கம்
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.
- அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் கம்பன் விழா தொடங்கி வரை 3 நாட்கள் நடக்கிறது. 9 மணிக்கு முத்துக்கருப்பன் பார்வதி அறக்கட்டளை சிவதாசன் சார்பில் இளையோர் அரங்கம் நடந்தது. பழனி அடைக்கலம், சுகுமாறன் முன்னிலை வகித்தனர். இலக்கியச்சுடர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
வியத்தகு தாய்மை என்ற தலைப்பில் மதன்குமார், மஸ்ருஸ்னவுப்ரா, யோகேஷ்குமார் பேசினார். 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜே.வி.எஸ் நிறுவன அறக்கட்டளை சார்பில் குடும்பத்தினர் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து 10.45 மணிக்கு செவாலியே சச்சிதானந்தம் அறக் கட்டளை சார்பில் வழக்காடு மன்றம் நடந்தது. பேராசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். இலங்கை ஜெயராஜ் நடுவராக செயல்பட்டார். இலக்குவனின் சீற்றம் ஏற்புடையதன்று என்ற பொருளில் விஜயசுந்தரி வழக்கு தொடர்ந்தார். கவிதாஜவகர் வழக்கை மறுத்து பேசினார்.
இன்று மாலை 5 மணிக்கு பட்டம்மாள் கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் முகுந்தன் சார்பில் கவியரங்கம் நடக்கிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.
நெல்லை ஜெயந்தா தலைமை வகிக்கிறார். என்னை நன்றாக படைத்தனன் என்ற தலைப்பில் பிரசாந்த், தங்கம் மூர்த்தி, இனியன் ஆகியோர் கவி வாசிக்கின்றனர்.
தொடர்ந்து 6.30 மணிக்கு சப்தகிரி சிவகொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார். சேர்ந்தவருள் சிறந்தவர் என்ற தலைப்பில் அறிவொளி, கோவிந்தராசு, வாசுதேவா, புதுக்கோட்டை பாரதி, சீனுவேணுகோபால், உமாசங்கர், இளங்கோ, சிதம்பரம், சரவண செல்வன் குகன், சுக்ரீவன், வீடணன் சார்பில் பேசுகின்றனர்.






