என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் செடல் உற்சவம்
    X

    கோப்பு படம்.

    செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் செடல் உற்சவம்

    • விழாவின் முக்கிய நிகழ்வாக செடல் உற்சவம் நடைபெற்றது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிற்குட்பட்ட மணக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக பால்குடம் எடுத்தல், எல்லை காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், பூங்கரகம் ஜோடித்தல், மாரியம்மனுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக செடல் உற்சவம் நடைபெற்றது.

    பக்தர்கள் அலகுகுத்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ரகுபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×