என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் பிறந்த நாள் விழா
    X

    எதிர்கட்சி தலைவர் சிவா முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி.

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் பிறந்த நாள் விழா

    • முதல்- அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மரியாதை
    • அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோரது தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மறைந்த ராமநாதனின் 75-வது பிறந்தநாள் பவள விழா பாகூரில் கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி குருவிநத்தம் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் மறைந்த ராமநாதனின் படத்துக்கு மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனைத்து கட்சி அமைச்சர்கள், எம்.பி., என்.ஆர்காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் என அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும், ஆர்.ஆர். பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து பாகூர் தொகுதி முழுக்க நடத்தப்பட்ட மகளிருக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதன் பிறந்தநாள் விழாவை பவள விழாவாக கொண்டாடி வரும் அவரது ஆதரவாளர்கள் அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    மேலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாகூர், கொரவள்ளிமேடு, கன்னியகோயில், வார்க்கால் ஓடை உள்ளிட்ட 6 இடங்களில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழாவும் நடந்தது.

    Next Story
    ×