என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Dravidar Welfare Department"

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரநிலைக் மேம்பாட்டு கழகம் இயக்குனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகம் (பாட்கோ) மூலம் ஆதிதிராவிட மக்கள் சிறு தொழில் மற்றும் சிறு வியாபாரம் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்கி வருகிறது.

     இத்திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 428 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10,000 மானியத்துடன் தலா 50,000 வீதம் ரூ.2 கோடி 50 லட்சம் வழங்க அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த மானிய கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சியை சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரநிலைக் மேம்பாட்டு கழகம் இயக்குனர்.

    அசோகன், பொது மேலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×