என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிக மது குடித்த ஊழியர் சுருண்டு விழுந்து சாவு
    X

    கோப்பு படம்.

    அதிக மது குடித்த ஊழியர் சுருண்டு விழுந்து சாவு

    • அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(47). தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் நெட்டப் பாக்கம் அடுத்த மடுகரை இந்திரா நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    முருகேசன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். விஜயலட்சுமி புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் கடந்த 2 ஆண்டுகளாக அரியூரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அதிக மது அருந்தி வீட்டுக்கு வந்த முருகேசன் திடீரென சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு வந்து வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது.

    உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×