என் மலர்
நீங்கள் தேடியது "கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்"
- நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தி ஆகிறது.
- எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாம் அனைவரும் யோகா கற்று கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வரும்போது ஒரு பெரியவர் என்னிடம் 2 செல்போன்கள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் 2 மாநிலத்தையே சமாளிக்கிறேன்.
2 செல்போனை சமாளிக்க முடியாதா என்றேன். அதேபோல் தான் அனைவரும் பணியாற்ற வேண்டும். நான் 48 மணி நேரம் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக பணியாற்ற தயாராக உள்ளேன்.
நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தி ஆகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒவ்வொரு மாநிலங்களிலும் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும். பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம். அந்த எண்ணம் தற்போது தான் தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்துவதற்கான திட்டம் இருக்கிறது.
கவர்னர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது.
எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன்.
இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
- கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வருகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் முழுமையான அதிகாரம் இல்லை என்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என அரசு விழாக்களில் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் மாநில அந்தஸ்து வேண்டும் என சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்து கேட்க உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.
ஆனால் கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.
புதுவை கம்பன் விழாவை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு டெல்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே? என கேட்டதற்கு, 'இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம் என தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறும்போது, மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும் என்றார்.






