என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கணவர் இறந்து போனதால் மூதாட்டி காமாட்சி மகள்களது வீட்டில் வசித்து வந்தார்
    • மூதாட்டி காமாட்சிக்கு வருகிற ஜூலை 23-ந் தேதி100 வயது பூர்த்தியாகவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்தனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பகுதியில் வசித்தவர் எம்.கணபதி. இவர், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ஐ.என்.ஏ. (இந்திய தேசிய ராணுவம்) வீரர்.

    இவருக்கும், நாகை மாவட்டம் வாழ்மங்களம் பகுதியைச்சேர்ந்த காமாட்சிக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள். 4 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி கடந்த 2011-ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

    கணவர் இறந்து போனதால் மூதாட்டி காமாட்சி மகள்களது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ள தனது மகளது வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டி காமாட்சிக்கு வருகிற ஜூலை 23-ந் தேதி100 வயது பூர்த்தியாகவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்தனர். விழாவை திரு.பட்டினத்தில் நடத்த மூதாட்டி காமாட்சி ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி, காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி அம்மன் கோவில் மண்டபத்தில் 100-வது பிறந்தநாள் விழா (பூர்ணாபி ஷேகம்) நேற்று நடைபெற்றது.

    இந்த விவரம் அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, மூதாட்டிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். நேற்று நடைபெற்ற விழாவில், குடும்ப உறுப்பினர்கள், ஊர் மக்கள் இணைந்து பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, திரு.பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்தி, ஆசிபெற்றனர்.

    • கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார்.
    • ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் மோகன் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர்.

    நல்ல உடல் தகுதியுடன் கை, கால்கள் திடகார்த்தமாக உள்ள சிலர் உழைக்காமல் சோம்பேறிதனமாக ஊதாரியாக திரிகிறார்கள். சிலர் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் வேலைகளை அதாவது உட்கார்ந்து பார்க்கும் வேலைகளை சொந்தமாகவோ அல்லது மற்றவர்களை சார்ந்திருந்தோ செய்வார்கள்.

    ஆனால் புதுவையில் ஒரு காலை இழந்த ஊனமுற்ற நபர் ஒருவர் வாழ நினைத்தால் எப்படியும் வாழலாம் என்பது போல ஒற்றைக்காலில் 12 மணி நேரத்திற்கும் மேல் நின்று கொண்டு வேலை செய்கிறார்.

    புதுவையை சேர்ந்த மோகன் (வயது44) என்பவர் பைக்கில் பஸ் மோதிய விபத்தில் ஒரு காலை இழந்த நிலையில் உள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். 6-ம் வகுப்பு வரை அவர் படித்துள்ளார்.

    கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார். அவர் பங்குக்கு வரும் பைக்குகள் மற்றும் கார்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தனது ஒரு காலை ஊன்றியபடி ஓடோடி சென்று பெட்ரோல் போடுகிறார். அவர் 20 ஆண்டாக இந்த வேலையில் உள்ளார்.

    ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் அவர் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர். ஒரு காலில் அவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதை பார்த்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

    என்னால எதுவுமே செய்ய முடியலன்னு சோம்பேறிதனமாக இருக்கும் வாலிபர்களுக்கும் அப்பா-அம்மா உழைப்பில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த வீடியோ உள்ளது.

    தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்-பதட்டம்

    புதுச்சேரி:

     புதுவை அருகே கரியமாணிக்கம் சந்திப்பில்  9மணி அளவில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     கரியமாணிக்கம் காலனி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்வர்கள் திடீரென ஒன்று கூடினர். உடனடியாக ரோந்து போலீசார், உதவி ஆய்வாளர் கதிரேசனிடம் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக உதவி ஆய்வாளர் கதிரேசன் போலீஸ் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்பகுதியில் கரியமாணிக்கம் பகுதியை பகுதியை சேர்ந்த ரஜினி குமார் மற்றும் பெரியாண்டவர் தலைமையில் 2 குழுக்கள் திரண்டு நின்றனர்.

     மேலும் அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் தலைமையில் மற்றொரு கும்பலும் திரண்டிருந்தனர். இரு குழுக்களில் உள்ள நபர்களிடையே மாற்றி மாற்றி ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர். 20-கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி பொதுமக்கள் செல்லும் வழியான கரி யமாணிக்கம் தவளக்குப்பம் சாலையில் தடையை ஏற்படுத்தினர்.

     நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளர் கதிரேசன் அவர்களை கலைந்துபோகக் கூறி எச்சரிக்கை செய்தார். ஆனால் இருதரப்பினரும் கலைந்துபோகாமல் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ஈடுபட்டனர்.

    போலீசாரை அவர்களது கடமையை செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்தனர், பின்னர். போலீசாரை தகாத வார்த்கைளால் திட்டியதோடு, மேற்கொண்டு கற்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு போலீசாரை தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டு போலீஸ் வாக னத்தையும் சேதப்படுத்தினர், இதில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தலைமை காவலர் பிரதீஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கற்களால் தாக்கியதில் காயம் அடைந்தனர்.

     இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அப்பகுதியை சேர்ந்த ரஜினிகுமார்(34), பெரியாண்டவர்(42), கிருஷ்ணகுமார்(35), கிருஷ்ணராஜ்(30), நரேந்திரன்(35), விநாயக மூர்த்தி(37), சத்திய மூர்த்தி(23), பாரதிராஜா(33), கதிரவன்(27), வீரன்(37), பாக்கியராஜ் (35), பவாணி சங்கர்(21), மற்றும் நரேஷ்(27), ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தலை மறைவாக உள்ள அனை வரையும் தேடி வருகின்றனர்.

     தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை எற்பட்டுள்ள தால் கரிய மாணிக்கம் பகுதியில் 20-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்
    • மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கழகம் சார்பில் 56-ம் ஆண்டு கம்பன் விழா தொடங்கி 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

     புதுவை கம்பன் கலையரங்கில் 12-ம் தேதி காலை 9.15 மணிக்கு தொடக்கவிழா நடக்கிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமையில் கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்புரை ஆற்றுகிறார்.

    கவர்னர் தமிழிசை கம்பன் விழாவை தொடங்கி வைக்கிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விழா மலர், புதுவை மாநில தமிழ் புலவர்களுக்கான பரிசுகளை வழங்குகிறார். கவிச்சக்கரவர்த்தியின் பணிவு என்ற பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூலை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட, புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் பெற்றுக் கொள்கிறார்.

     முருகேசன் பானுமதி அறக்கட்டளையின் கம்பக்காவலர் பரிசை இலங்கை விஷ்ணுதானுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்குகிறார். அருணகிரி அறக்கட்ட ளையின் கம்பன் ஆய்வு நூல் பரிசை அலெக்சு தேவராசு சேன்மார்க்கிற்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வழங்குகிறார்.

    கம்பன் கழக போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

    கம்பன் கழக அறக்கட்டளை பரிசுகளை எம்.பி. வைத்தி லிங்கம் வழங்கு கிறார். எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, சென்னை கம்பன் கழக நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். மேலும் 14-ந் தேதி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

    முன்னதாக விழாவிற்கு வருபவர்களை கம்பன் கழக செயலாளரும் முன்னள் சபாநாயகருமான சிவக் கொழுந்து, செல்வகணபதி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தமிழ் அறிஞர்கள், கம்பன் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். 

    • மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.
    • விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம்  கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரடியாக என்னை விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார்.

     மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. கவர்னர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.

    கடந்த 2016-ல் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் முன்பு கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தார். அதனால் நீதிமன்றத்தை நாடினோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் தற்போதைய அமைச்சர் லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வக்கீலான முதல்-அமைச்சர் ரங்கசாமி படித்து பார்க்கவேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என்பது புரியும்.

    நிர்வாகம் திரைமறைவில் நடத்த வேண்டுமா? முதல்-அமைச்சருக்கு நிர்வாகமே தெரியாது. நிர்வாக சீர்கேடு பற்றி அவர் எங்களை குற்றம்சாட்டுகிறார். விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. தற்போது நிர்வாக முறைகேடுகள் நடக்கிறது.

     ரங்கசாமி நிர்வாகத்தில் புலி அல்ல. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடு–பவர்தான். தனது அதி காரத்தை செலுத்தாமல் என்னை குறைகூறுவதை ரங்கசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். கிரண்பேடி தொல்லையையும் மீறி திட்டங்களை நிறைவேற்றி னோம். தற்போது அண்ணன்- தங்கை என்று கூறிய நிலையில் திட்டங்கள் தடைப்படுவது ஏன்.?மாநிலஅந்தஸ்து, மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்ப்பது உள்ளிட்ட ரங்கசாமி யின் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகி யும் செயல்படுத்தவில்லை. ஒன்று கூட நடக்காததை சுட்டிக்காட்டி கேட்கிறோம். ரங்கசாமி கோபப்படுவதில் அர்த்தமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
    • வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் எதிரில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொரு ளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைச் செயலாளர் நாகமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், , தொகுதி அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் ராஜா, ஜீவா ஏற்பாடு செய்தனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அறிவிப்பு
    • ரூ.290 வழங்கப்படும் என அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரிய ஏரி ஆழப்படுத்துதல், பிள்ளையார்குப்பம் பெரிய ஏரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) ரூ 1 கோடியே 3 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள்  தொடங்கப்பட்டது.

     இந்தப் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி காந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுவை மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு நாள் ஊதியமாக ரூ 200, 220, 245 ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.

    இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பேரில் ஏம்பலம் தொகுதியில் இன்று தொடங்கப்பட்ட 100 நாள் வேலை செய்யபவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ 290 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இனி 100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ 290 வழங்கப்படும் என அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

    இந்த பணி தொடக்கத்தின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர குமரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பணி ஆய்வாளர் குப்புராமன், உத்திரவேலு, நந்தகோபால் கிராமத் திட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.'

    • நாம் அனைவரும் இணைந்து ஓ.பி.எஸ். கருத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.
    • ஓ.பி.எஸ் தற்போதைய அரசியல் சாதுரிய நகர்வுகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அளவு மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை திருச்சி மாநாடு நிரூபித்தது. ஓ.பி.எஸ் தற்போதைய அரசியல் சாதுரிய நகர்வுகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டு உள்ளது.

    குறிப்பாக தொண்டர்கள் இயக்கத்தை தன் வசப்படுத்த நினைக்கும் சுயநல சக்திகள் அதிர்ந்து போய் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் அடுத்த மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எனவே நாம் அனைவரும் இணைந்து ஓ.பி.எஸ். கருத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள் மகேஸ்வரி, செல்வராஜ், கோ விந்தம்மாள், விஜயலட்சுமி, சதாசிவம், சங்கர் உடையார், மாநில அணி செயலாளர்கள் லட்சுமணன், வெரோனிகா, புகழ் பாரி, முருகன், விவேக் , மாநில அணி தலைவர்கள் லியோ ராஜசேகர், ராதாகிருஷ்ணன், தம்பா, புதுவை நகர செயலாளர் சேகர், தொகுதி கழக செயலாளர்கள் அப்பாவு, ஆர்.வி.ஆர். வெங்கடேசன், நாக.லோகநாதன், சுப்பி ரமணியன், கலியபெருமாள், சுந்தரமூர்த்தி,ஏம்பலம் கோவிந்தராஜ்,

    காட்டுக்குப்பம் நடராஜன், ராஜ் பவன் ஐயப்பன், பாலசுப்ரமணியன், தர்மபுரி ஆனந்தன், நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானப் பூங்கோதை, கமலா,கணபதி மோகன்தாஸ்,இந்திரா, நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சித்தா கணேசன், முனியன், இளங்கோவன், இளவரசு, பெயிண்டர் சேகர், பேச்சாளர் அயரின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணா மலையை சேர்ந்த கேசவன் என்பவரு டன் 3 லாரிக்கான விலையை பேசியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி குண்டுப்பாளையம் நவசக்தி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன். லாரி உரிமையாளர். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    புருஷோத்தமன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது மனைவி திலகவதி மற்றும் பிள்ளைகளால் லாரியை பராமரிக்க முடியாததால் அதனை விற்பனை செய்ய முடிவு செய்தனர். திருவண்ணா மலையை சேர்ந்த கேசவன் என்பவரு டன் 3 லாரிக்கான விலையை பேசியுள்ளனர்.

    ரூ,42 லட்சத்து 75 ஆயிரம் தொகையை 3 மாதத்திற்குள் தருவது என முடிவு செய்து, ரூ.1 லட்சம் முன் பணமாக பெற்றுக்கொண்டு 3 லாரிகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 3 மாதத்திற்குள் புருஷோத்தமனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனையடுத்து லாரிகளை மாத வாடகைக்கு எடுத்து ெகாள்வது என முடிவு செய்துள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு லாரி க்கும் மாதம் ரூ 30 ஆயிரம் வாடகை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த லாரி வாடகை யையும் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கோரிமேடு போலீசில் திலகவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செயது புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    • பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார் பாராட்டு
    • ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் முதல்வர், துணை நிலை ஆளுநருடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். ஆனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    இதனால் புதுவை அரசு நிர்வாகம் பிரதமர் மோடி கூறியதைப்போல் இரட்டை இன்ஜினைப்போல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர பிரதமர் மோடி முதல் காரணம் என்பதைப்போல், புதுவையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர துணை நிலை ஆளுநராகிய தமிழிசை சவுந்தரராஜன் என்பது நடுநிலையான மக்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரி கள், ஊழியர்களுக்கும் தெரியும். ஜிப்மர் மருத்துவ மனையில் கால் நூற்றாண்டி ற்கும்மேலாக சில மருத்துவ சிகிச்சைகளுக்கு கட்டணம்வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள்தான் ஆகிறது. அதுவும் புதுவையில் தேசிய ஜனநாக கூட்டணி ஆட்சிக்கு வந்து 2ஆண்டுகள்தான் ஆகிறது.

    இதுபோன்ற நிலையில் பா.ஜனதா மீதும், தற்போதைய அரசு மீதும், ஜிப்மர் நிர்வாகத்துமீதும் குற்றச்சாட்டு கூறுவது எப்படி சரியாக இருக்கும்? அவ்வாறு தற்போதுதான் கட்டணம் நிர்ணயம் மற்றும் உயர்வு செய்யப்பட்டு ள்ளது என்றாலும் முதலில் ஜிப்மர் இயக்குனரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்க வேண்டும். அந்த பேச்சு வார்த்தைக்கு ஜிப்மர் இயக்குனர் சம்மதிக்காமல் இருந்தாலோ, அல்லது தரும் விளக்கம் சரியானதாக இல்லாமல் இருந்தாலோ போராட்டம் நடத்தியிருக்கலாம். அதுவும் கூட ஜிப்மருக்கு செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இவைகளை செய்யாமல் அரசியலுக்காக போராட்டம் , நடத்துவது தவறு. இதை த்தான் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கண்டித்தார். இதில் என்ன தவறு உள்ளது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்த பா.ஜனதா தலைவர் சாமி நாதனை பாராட்டுகின்றோம். அதேசமயம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மக்கள் நலன் கருதி செயல்படுகின்றாரே தவிர, பா.ஜனதாவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படவில்லை. அவரது அனைத்து நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்தால் தெரியும். எனவே எதிர்க்கட்சிகள் பா.ஜனதா கண்ணாடி அணிந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் செயல்களை பார்க்காமல், வெறும் கண்ணால் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
    • 19-ந் தேதி மனுக்களை திரும்பப்பெறுதல், ஆய்வு செய்தல், 21-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார்.

    தேர்தல் ஆணையர் பிரபாகரன், துணை தலைவர் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் சீனு மோகன்தாசு, சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் தமிழ்ச்சங்க தலைவர் முத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    2023 முதல் 3 ஆண்டு தமிழ்ச்சங்க ஆட்சிக் குழுவின் 11 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 28-ந் தேதி நடக்கிறது. வரும் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    15-ந் தேதி வேட்புமனு வழங்கப்படுகிறது. 17-ந் தேதி வேட்பாளர் விண்ணப்பம் தாக்கல்,

    19-ந் தேதி மனுக்களை திரும்பப்பெறுதல், ஆய்வு செய்தல், 21-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 28-ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது.
    • ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தென் மாநில பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக நோயாளிகள் ஜிப்மருக்கு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் 16-ந்தேதி 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தின. ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்த கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜிப்மரில் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த சூழ்நிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 16.3.2023-ந்தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடிக்கணக்கில் நிதி வழங்கி அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், ஜிப்மர் இயக்குனர் சேவை கட்டணங்களை அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நானும், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேல், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு டெல்லிக்கு சென்றோம்.

    டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மேற்படி ஜிப்மரின் சேவை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய மந்திரி சேவை கட்டணங்களை ரத்து செய்ய துறையின் செயலரை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஜிப்மரில் அமல்படுத்தப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கோரிக்கையை ஏற்று சேவை கட்டணங்களை ரத்து செய்ய ஆணை பிறப்பித்த மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியாவிற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. ஜிப்மருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஜிப்மரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி பா.ஜனதா சார்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×